» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோயிலில் ரூ. 4.98 கோடி உண்டியல் வருவாய்!

வெள்ளி 21, ஜூன் 2024 8:06:25 AM (IST)

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் வருவாய் ரூ. 4.98 கோடி கிடைத்துள்ளது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருவாய் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. கோயில் வசந்த மண்டபத்தில் அறங்காவலர் குழுத் தலைவர் ரா. அருள்முருகன் தலைமையில் இணை ஆணையர் மு.கார்த்திக் முன்னிலையில் புதன்கிழமை உண்டியல் வருவாய் எண்ணப்பட்டது. 

இதில் தூத்துக்குடி உதவி ஆணையர் செல்வி, கோயில் கண்காணிப்பாளர் கோமதி, ஆய்வர் செந்தில்நாயகி, அறங்காவலர் குழுத் தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ்பாண்டியன், பொதுமக்கள் பிரதிநிதிகள் கருப்பன், மோகன், சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேத பாடசாலை உழவார பணிக்குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இதில் ரொக்கமாக ரூ.4 கோடியே 98 லட்சத்து 7,405 கிடைத்துள்ளது. தங்கம் 3 கிலோ 400 கிராம், வெள்ளி 54 கிலோ 500 கிராம், பித்தளை 99 கிலோ, செம்பு 15 கிலோ, தகரம் 7 கிலோ மற்றும் 851 வெளிநாட்டு பணத்தாள்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital




Thoothukudi Business Directory