» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காயல்பட்டினம் வரலாற்று ஆய்வு மையம் சார்வில் காயல் கலாச்சார சங்கமம்!
வெள்ளி 21, ஜூன் 2024 7:57:42 AM (IST)

காயல்பட்டினம் வரலாற்று ஆய்வு மையம் சார்பில், மாபர் - மலபார் ஒன்றுகூடல், காயல் கலாச்சார கலை நிகழ்ச்சி, நூல் வெளியீடு ஆகிய அம்சங்களை உள்ளடக்கி, காயல் கலாச்சார சங்கம விழா, காயல்பட்டினம் கீழ நெய்னார் தெருவில் உள்ள கற்புடையார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
காயல்பட்டினம் வரலாற்று ஆய்வு மைய ஆலோசகர் வி.எஸ்.எஸ். முஹம்மத் முஹ்யித்தீன் தலைமை தாங்கினார். நகரப் பிரமுகர்களான ராவன்னா அபுல் ஹஸன், மக்கீ நூஹ் தம்பி, டீ.எம்.ஆர். மர்ஸூக், எம்.எஸ். அஹ்மத் முஹ்யித்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காயல்பட்டினம் வரலாற்று ஆய்வு மைய தகவல் தொடர்பாளர் ஹாஃபிள் எஸ்.கே. ஸாலிஹ் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். காயல்பட்டினம் வரலாற்று ஆய்வு மைய தலைவரும், காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவருமான வாவு எஸ். செய்யித் அப்துர் ரஹ்மான் அனுப்பிய வாழ்த்துரையை, பீ.எஸ்.எம். இல்யாஸ் வாசித்தார்.
காயல்பட்டினம் வரலாற்று ஆய்வு மைய பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கர் வரவேற்புரை ஆற்றினார். செயற்குழு உறுப்பினர்களான சாளை பஷீர், பீ.என்.எஸ். சுல்தான் ஜமாலுத்தீன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். தமிழ்நாடு அரசின் சார்பில், தூத்துக்குடி நெய்தல் களை கலை விழாவில் பங்கேற்ற குழுவினரின் காயல் கலாச்சார கலை நிகழ்ச்சி, ஆசிரியர்களான இசட்.ஏ. ஷேக் அப்துல் காதிர், கே.எம்.ஐ. ஷேக் அப்துல் காதிர் சூஃபீ ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
கேரள அரசின் மகாகவி மெயின் குட்டி வைத்தியர் மாப்பிளா கலா அகாடமியைச் சேர்ந்த மாணவ - மாணவியர் பங்கேற்ற மாபர் - மலபார் ஒன்றுகூடல் மாப்பிளா பாடல் கலை நிகழ்ச்சி, மகாகவி மெயின் குட்டி வைத்தியர் மாப்பிளா கலா அகாடமியின் செயலாளர் பஷீர் சுங்கதாரா, இணைச் செயலாளர் ஃபைசல், துணைத் தலைவர் புலிக்கோட்டில் ஹைதர் அலீ ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
காயல்பட்டினம் கண்ணகுமது மகுதூ முகம்மது புலவர் இயற்றி, சென்னை புதுக் கல்லூரி இணை பேராசிரியர் முரளி அரூபன் பதிப்பித்துள்ள சீறா வசன காவியம் எனும் நூலை காயல்பட்டினம் வரலாற்று ஆய்வு மைய ஆலோசகர் வீ.எஸ்.எஸ். முஹ்யித்தீன் தம்பி வெளியிட, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் எம்.கே. முஹ்யித்தீன் தம்பி துரை, காயல்பட்டினம் வரலாற்று ஆய்வு மைய துணைத் தலைவர் சொளுக்கு முஹம்மத் இஸ்மாஈல் முத்து ஹாஜி, செயற்குழு உறுப்பினர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
கேரள வரலாற்று ஆய்வாளர் மன்சூர் நெய்னா எழுதியுள்ள HISTORY OF NAINA MARAKKAR எனும் நூலை காயல்பட்டினம் வரலாற்று ஆய்வு மைய துணைப் பொதுச் செயலாளர் பீ.எஸ்.எம். இல்யாஸ் வெளியிட, காயல்பட்டினம் வரலாற்று ஆய்வு மைய துணைத் தலைவர் ஏ.கே. செய்யது அப்துல் காதிர், அதன் துணைப் பொதுச் செயலாளர் ஏ.கே. ஷம்சுத்தீன், காயல்பட்டினம் முஸ்லிம். ஐக்கியப் பேரவை பொதுச் செயலாளர் வாவு எம்.எம். ஷம்சுத்தீன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களை வாவு எஸ்.ஏ.ஆர். அஹ்மத் இஸ்ஹாக் அஸ்ஹரீ, ஜே.எம். அப்துர் ரஹீம் காதிரீ, எம்.எம். அஜீஸ் ஆகியோர் கவுரவித்தனர். சென்னை புதுக் கல்லூரி இணை பேராசிரியர் முரளி அரூபன், கேரளாவைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் மன்சூர் நெய்னா, காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளியின் கதீப் மவ்லவீ எச்.ஏ. அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் முனைவர் படத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள URBANISATION IN COASTAL PENINSULAR INDIA A CASE STUDY OF CALICUT AND KAYALPATTINAM (1200 - 1600 A.D.) எனும் ஆய்வறிக்கை குறித்து, உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கவ்தியா கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் முனைவர் டீ. அனஸ் பாபு விளக்கவுரை ஆற்றினார்.
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் இஸ்லாமிய தமிழ் பண்பாட்டு ஆய்வு மைய இயக்குநர் டாக்டர் ராஜா முஹம்மத் சிறப்புரை ஆற்றினார். காயல்பட்டினம் வரலாற்று ஆய்வு மைய பொருளாளர் கே.எம்.ஏ. அஹ்மத் முஹ்யித்தீன் நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும், காயல்பட்டினம் வரலாற்று ஆய்வு மைய ஒருங்கிணைப்பாளர் காயல் எஸ்.இ. அமானுல்லாஹ் நெறிப்படுத்தினார். விழா நிகழ்விடமான கற்புடையார் பள்ளியின் இமாம் ஹாஃபிள் கே.எம். ஹாமித் லெப்பை துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. மகளிருக்கு தனி இட வசதி செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, காயல்பட்டினம் வரலாற்று ஆய்வு மைய செயற்குழு உறுப்பினர்களான ஏ.எல்.எஸ். அபூ சாலிஹ், எஸ்.ஏ.கே. செய்யித் மீரான் முஜம்மில், ஹாஃபிள் ஏ.எல். ஷம்சுத்தீன் காமில், எம்.எஸ். இப்ராஹீம் அன்சாரீ, ஹாஃபிள் எஸ்.எம். அனீஸ் அஹ்மத், காயல்பட்டினம் வரலாற்று ஆய்வு மைய ஆவண சேகரிப்பு பொறுப்பாளர்களான எஸ்.எஸ்.எம். மஹ்மூத் மர்ஜூக், எஸ்.ஏ. இப்ராஹீம் மக்கீ, என்.டீ. அஹ்மத் சலாஹுத்தீன், மவ்லவீ சுல்தான் பாக்கவீ, தகவல் தொடர்பாளர் பீ.எம்.எஸ். உமர் ஒலி, காயல்பட்டினம் வரலாற்று ஆய்வு மைய வெளிநாட்டு பிரதிநிதிகளான பீ.எஸ். ரஃபீக் (இலங்கை), பீ.எஸ்.ஜே. நூருத்தீன் நெய்னா (சவூதி அரபிய்யா), ஹாஃபிள் வீ.எம்.டீ. முஹம்மத் ஹஸன் (ஹாங்காங்), டபிள்யு.ஏ.எஸ். முஹம்மத் அலீ (தாய்லாந்து), எம்.எஸ். அப்துல் ஹமீத் (ஐக்கிய அரபு அமீரகம்), எஸ்.ஏ.எஸ். ஃபாஸுல் கரீம் (கத்தர்), ஹாஃபிள் கே.எம்.என். முஹம்மத் அபூபக்கர் (ஓமன்), எஸ்.எம்.எம். அபூ தாஹிர் (குவைத்), பாளையம் முஹம்மத் ஹஸன் (சிங்கப்பூர்), காயல்பட்டினம் வரலாற்று ஆய்வு மைய வெளியூர் பிரதிநிதிகளான எஸ்.எஸ். சதக்கத்துல்லாஹ் (சென்னை), டபிள்யு.கே.எம். சாலிஹ் (கல்கத்தா), பீ.எம்.டீ. மஹ்மூத் நெய்னா (மும்பை), எஸ்.எம். தைக்கா உமர் (டில்லி), செய்யித் ஐதுரூஸ் (கோழிக்கோடு) உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
செவ்வாய் 8, ஜூலை 2025 5:26:25 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கம்
செவ்வாய் 8, ஜூலை 2025 4:26:28 PM (IST)

திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் : கனிமொழி எம்பி பங்கேற்பு!
செவ்வாய் 8, ஜூலை 2025 3:22:35 PM (IST)

லாக்அப் படுகொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பு: வாலிபர் சங்கம் கண்டனம்!
செவ்வாய் 8, ஜூலை 2025 3:13:02 PM (IST)

இத்தனை விபத்துகள் நேர்ந்த பின்னும், மத்திய அரசுக்கு துளியளவும் கவலை இல்லை: கனிமொழி எம்பி
செவ்வாய் 8, ஜூலை 2025 12:37:58 PM (IST)

தூத்துக்குடியில் கார் மீது கலவை இயந்திரம் மோதல்: ஒருவர் காயம்!
செவ்வாய் 8, ஜூலை 2025 11:15:42 AM (IST)
