» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தில் துபாய் தமிழ் குடும்பத்தினர் ஆய்வு

வெள்ளி 21, ஜூன் 2024 7:47:51 AM (IST)ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தினை குவைத் நாட்டில் உள்ள தமிழ்  குடும்பத்தினர் பார்வையிட்டனர்...

இந்தியாவிலேயே முதல் சைட் மியூசியம் தாமிரபரணி ஆற்றங்கரை ஆதிச்சநல்லூரில் அமைந்துள்ளது. இந்த சைட் மியூசியத்தினை பார்க்க உலக அளவில் தொல்லியல் ஆர்வலர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.  இந்த சைட் மியூசியத்தினை சரி வர பரமாரிக்கவில்லை என மத்திய தொல்லியல் துறை மீது  வழக்கு தொடரப்பட்டு,  அந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.  இந்த சமயத்தில்  இங்கு பணியாளர்கள்  வேலையை விட்டு நிறுத்தப்பட்டு விட்டனர். இதனால் சைட்  மியூசியத்தினை பராமரிக்க ஆள் இல்லை.  இங்கு வளர்க்கப்பட்ட  புல் தரைகள் எல்லாம் காய்ந்து வருகிறது. இங்கு பரமாரிக்கப்பட்ட பார்வையாளர்கள் பதிவு புத்தகத்தினையும்  பராமரிக்க வில்லை.  ஆனாலும்  உலகம் முழுவதும் இருந்து  பார்வையாளர்கள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர்.

திறந்து கிடக்கும் இந்த  சைட் மியூசியத்தினை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தில் இருந்தும் பார்வையாளர்கள் பார்த்து வருகின்றனர். குவைத் நாட்டில்  தமிழ்நாடு பொறியாளர் குழுமத்தின் பொருளாளர் சுப்பிரமணியன் தனது குடும்பத்துடன் பார்வையிட வந்தார். அவர்களுக்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு விளக்கம் அளித்தார். அந்த சமயத்தில் ஈரோடு மாவட்த்தில் இருந்து 10க்கு மேற்பட்டோர்  பார்வையிட வந்தனர்.

சுப்பிரமணியன் கூறும் போது, குவைத்தில் உள்ள 40 லட்சம் மக்கள் தொகையில் இந்தியர்கள் 10 லட்சம் பேர் வசிக்கிறோம். அதில் தமிழர்களும் கனிசமானவர்கள்  வசிக்கிறோம். அவ்வூரிலும் மியூசியம் உள்ளது. மிகப்பிரமாண்டமான மியூசியமாக இருந்தாலும்  அங்கு செயற்கையாக உருவாக்கப்பட்ட வாழ்வியல்தான்  மிக அதிகமாக காணப்படுகிறது. ஆனால் உள்ளது உள்ள படியே  இந்தியாவிலேயே முதல்  முதல் சைட மியூசியம்  தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆதிச்சநல்லூரில் அமைந்ததை பத்திரிக்கை செய்தி வழியாக அறிந்தோம். 

எனவே தாயகம் வந்தவுடன்  மியூசியத்தினை பார்வையிட வந்தோம். எங்களுக்கு   இதை பார்த்தவுடன் சந்தோசமாக உள்ளது. உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூருக்கு வெளிநாட்டில் இருந்து மேலும் அதிகமானவர்கள் இங்கு வந்து செல்ல வாய்ப்புள்ளது. அதே வேளையில் இந்த மியூசியத்தினை சரியாக பராமரித்து இங்கே மாடலாக வைத்துள்ள உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தினை கட்டி முடித்தால் உலக அரங்கில் ஆதிச்சநல்லூர் பெருமை பெற்று விடும்  என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital
Thoothukudi Business Directory