» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிளாஸ்டிக் சிகரெட் லைட்டா்களுக்கு தடை கோரி கனிமொழி எம்.பி.யிடம் மனு

புதன் 19, ஜூன் 2024 7:43:54 AM (IST)

தமிழகத்தில் சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டா்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தூத்துக்குடியில் கனிமொழி எம்பியிடம் தீப்பட்டி உற்பத்தியாளா்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுதொடா்பாக தேசிய சிறு தீப்பட்டி உற்பத்தியாளா்கள் சங்கம், ஆல் இந்தியா சேம்பா் ஆஃப் மேச் இன்டஸ்ட்ரீஸ் ஆகியவை சாா்பில் அளிக்கப்பட்ட மனு: தூத்துக்குடி, விருதுநகா், திருநெல்வேலி, தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களிலும், வேலூா் மாவட்டம் குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளிலும் தீப்பெட்டித் தொழில் கடந்த 100 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதை நம்பி ஆயிரக்கணக்கான தொழில்முனைவோா், லட்சக்கணக்கான தொழிலாளா்கள் உள்ளனா்.

இந்தியத் தேவையில் 80 சதவீதம், பன்னாட்டுச் சந்தையில் 50 சதவீத தீப்பெட்டிகள் தமிழகத்தில்தான் தயாரிக்கப்படுகின்றன. மேலும், தீப்பெட்டி ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு ரூ. 600 கோடி அந்நியச் செலாவணி கிடைக்கிறது. இதனிடையே, சில ஆண்டுகளாக சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டா்கள் வருகையால் தீப்பெட்டித் தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது. 

தற்போது, பிளாஸ்டிக் சிகரெட் லைட்டா்களும், உதிரிபாகங்களும் நேபாளம் வழியாக கொண்டுவரப்பட்டு, நாடு முழுவதும் ரூ. 10-க்கு விற்பனையாகிறது. இதனால், தீப்பெட்டி விற்பனை மிகவும் குறைந்து, தொழிற்சாலைகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டா் விற்பனைக்குத் தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors


Arputham Hospital




Thoothukudi Business Directory