» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாலிபர் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 18, ஜூன் 2024 9:43:41 PM (IST)
கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-I தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அமீர்பாளையம் பகுதியில் வைத்து கடந்த 20.05.2018 அன்று விளாத்திகுளம் சாலையம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் மாரிமுத்து (28) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் விளாத்திகுளம் சத்யாநகரை சேர்ந்த மந்திரமூர்த்தி மகன் சுயம்புலிங்கம் (33) மற்றும் விளாத்திகுளம் பூமாரிஅம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த காத்திகேயன் மகன் சதீஷ்குமார் (32) ஆகிய இருவரையும் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கை அப்போதைய விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் செல்வகுமார் புலன் விசாரணை செய்து கடந்த 24.08.2018 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-I ல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவன் இன்று (18.06.2024) குற்றவாளிகளான சுயம்புலிங்கம் மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 5000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியல்ராஜ் மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமைக் காவலர் கண்ணன் ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் புதிய பூங்கா, விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும் : மேயர் தகவல்
புதன் 19, மார்ச் 2025 3:17:23 PM (IST)

பெட்ரோலில் எத்தனால் கூடுதலாக கலப்பதால் வாகனங்கள் பழுது: ஆய்வு நடத்த கோரிக்கை!
புதன் 19, மார்ச் 2025 3:06:01 PM (IST)

மகளிர் சுய உதவி குழு தலைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி: மருமகன் கைது!!
புதன் 19, மார்ச் 2025 10:57:19 AM (IST)

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா
புதன் 19, மார்ச் 2025 10:33:26 AM (IST)

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்!
புதன் 19, மார்ச் 2025 8:28:09 AM (IST)

அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம்
புதன் 19, மார்ச் 2025 8:24:03 AM (IST)
