» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உரிய பயணச்சீட்டு இல்லாமல் முன்பதிவு பெட்டிகளில் பயணம்: ரூ1.64 லட்சம் அபராதம் வசூல்!

செவ்வாய் 18, ஜூன் 2024 9:38:02 PM (IST)

தூத்துக்குடி- மைசூர் ரயிலில் உரிய பயணச்சீட்டு இல்லாமல் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் பயணம் செய்த நபர்களிடம் ரூ1.64 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது. 

மத்திய ரயில்வே அமைச்சர் கடந்த வியாழக்கிழமை அன்று இந்திய ரயில்வே மண்டல பொது மேலாளர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் உரிய பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்யும் பயணிகள் பற்றி "ரயில் மதாத்” செயலியில் புகார்கள் அதிகமாக வருவது குறித்து அமைச்சர் ஆலோசனை நடத்தினார். மேலும் இதுபோன்ற புகார்களை தவிர்க்கவும் முன்பதிவு செய்த பயணிகள் இடையூறு இல்லாமல் பயணம் செய்யவும் அதிரடி சோதனைகள் நடத்த உத்தரவிட்டார்.

இதையடுத்து மதுரை கோட்டத்தில் வைகை, குருவாயூர், பாலக்காடு – பழனி – சென்னை, தூத்துக்குடி – மைசூர் ரயில்களில் கடந்த ஐந்து நாட்களாக பயணச்சீட்டு பரிசோதகர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினார். இதில் உரிய பயணச்சீட்டு இல்லாமல் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் பயணம் செய்த பயணிகள் பிடிக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து அபராதமாக ரூபாய் 1,64,415 வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த அதிரடி சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital



Thoothukudi Business Directory