» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல் சேமிப்பு கணக்கு: அஞ்சல்துறை அழைப்பு!

செவ்வாய் 18, ஜூன் 2024 8:49:50 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு புதிய அஞ்சல் சேமிப்பு கணக்குகள் தொடங்க அஞ்சல்துறை அழைப்பு விடுத்துள்ளது. 

இதுகுறித்து தூத்துக்குடி அஞ்சல்துறை முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சு.முனிகிருஷ்ணன் கூறியதாவது: இந்திய அஞ்சல்துறை மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு புதிய அஞ்சல் சேமிப்பு கணக்குகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

அதன்படி,  பத்து வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு அஞ்சல் சேமிப்பு கணக்குகள், பூஜ்ஜிய இருப்புத் தொகை (Zero Balance Account) வசதியுடன் தொடங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.  பத்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (IPPB) கணக்குகள், பூஜ்ஜிய இருப்பு கணக்கு (Zero Balance Account) வசதியுடன் தொடங்கலாம்.

இத்திட்டத்தின் மூலம் பள்ளி மாணவ மாணவிகள் அரசு உதவித்தொகை மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக வழங்கப்படும் இதர பயன்கள் திட்ட உதவித்தொகையும் அஞ்சல் சேமிப்பு கணக்குகள்/ இந்திய போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (IPPB) கணக்குகள் மூலம் பெற்று பயன்பெறலாம். இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தின் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சு.முனிகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களை தொடர்பு கொள்ளவும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education


New Shape Tailors

Arputham Hospital






Thoothukudi Business Directory