» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நாளை தொடங்கி 2 நாட்கள் நடைபெறும்!

செவ்வாய் 18, ஜூன் 2024 8:15:52 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் சாகர் கவாச் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நாளை தொடங்கி 2 நாட்கள் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மீன்வளத்துறை உதவி இயக்குநர் விஜய ராகவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சென்னை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை முதன்மைச் செயலாளர் / ஆணையர் குறிப்பாணையில், கடலோரபாதுகாப்பு ஒத்திகை SAGAR KAVACH - 19.06.2024 முதல் 20.06.2024 வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடலோர பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து கிராம மீனவர்களுக்கு எடுத்துரைக்கவும், கடலில் / கடலோரப் பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நபர்கள், அந்நியர்களின் நடமாட்டத்தையோ, சந்தேகத்திற்கிடமான மீன்பிடிப் படகுகள் மற்றும் மீன்பிடிப்பில் ஈடுபடாத வேறுபடகுகளின் நடமாட்டத்தையோ, அச்சுறுத்தலான செயல்பாடுகளையோ கண்ணுறும் போது அத்தகவலை 24 மணிநேரமும் இயங்கக்கூடிய கடலோர பாதுகாப்பு உதவி மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1554க்கு தகவல் தெரிவித்திடவும் அதனைத் தொடர்ந்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்திற்கும், உள்ளுர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், கடலோர பாதுகாப்பு படையினரால் படகுகள் சோதனையிடப்படும் என்பதால் மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்கு செல்லும் போது கலன்களின் பதிவு சம்மந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் தங்களது மீனவர் அடையாள அட்டை, பயோமெட்ரிக் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களின் அசலினை கடலுக்கு கொண்டு செல்ல வேண்டும். 

இது தவிர்த்து கடற்கரையில் அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் படகுகள் தென்படுமாயின் உடனே கீழ்க்கண்ட தொலைபேசி எண்களுக்கு தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் அடையாளம் தெரியாத நபர்கள் எவரையும் படகுகளில் ஏற்றி செல்லக்கூடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட அறிவுரைகளை தங்கள் சங்க சங்கம் / கிராம மீனவர்களுக்கு தெரிவித்து அதனை கடைபிடித்திட அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1554 கடலோர பாதுகாப்பு உதவிமையம்

0461 2352046 / 2353907 இந்திய கடலோர காவல்படை நிலையம், தூத்துக்குடி.

044 24341757 மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை முதன்மைச் செயலாளர் / ஆணையர், சென்னை

0461 2325458 மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர்

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors



Arputham Hospital





Thoothukudi Business Directory