» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அண்ணா பல்கலை., கிரிக்கெட் போட்டி: மதர் தெரசா கல்லூரி பொறியியல் அணி வெற்றி!

செவ்வாய் 18, ஜூன் 2024 5:50:38 PM (IST)அண்ணா பல்கலைகழகம் நடத்திய மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டியில் வாகைக்குளம் செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரி மாணவர்கள் முதல் பரிசு வென்று சாதனை படைத்தனர்.

அண்ணா பல்கலைக்கழகம் மண்டல அளவில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. இதில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த 36 அணிகள் பங்கேற்றன. இப்போட்டியில் தூத்துக்குடி வாகைகுளம் செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரியை சேர்ந்த கேப்டன் வள்ளிசாரதி தலைமையிலான அணியினர் அபாரமாக ஆடி முதல் பரிசை வென்று சாதனை படைத்தனர். 

மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற அணி மாணவர்களை  ஸ்காட் கல்வி குழும இயக்குநர் (மாணவர் சேர்க்கை) ஜான் கென்னடி, கல்லூரி முதல்வர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன் இயக்குனர் ஜார்ஜ் கிளின்டன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory