» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குலசேகரபட்டினம் கிளை நூலகத்திற்கு விருது : அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்!
திங்கள் 20, நவம்பர் 2023 3:24:58 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம்,குலசேகரப்பட்டணம் கிளை நூலகத்திற்கு சிறந்த நூலகத்திற்கான எஸ்.ஆர் அரங்கநாதன் விருதினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.
ஒவ்வொருவருடமும் நவ-14 முதல் 20ம் தேதி வரை தேசிய நூலக வாரவிழா கொண்டாடப்பட்டு அதில் சிறந்த நூலகர்,சிறந்த நூலகங்களுக்கு நூலக தந்தை எஸ்.ஆர். அரங்கநாதனின் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. தமிழக நூலகத் துறையின் சார்பில்தேசிய நூலக வார விழா சீர்காழியில் நடந்தது.
இதில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் கிளை நூலகம் சிறந்த நூலகமாக தேர்வு செய்யப்பட்டு எஸ்.ஆர் அரங்கநாதன் விருதினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நூலகர் மாதவனிடம் வழங்கினார்.விருது பெற்ற நூலகரை நூலகத்துறை இயக்குனர் இளம் பகவத்,தூத்துக்குடி மாவட்ட நூலக அலுவலர் ரங்கநாயகி,திருநெல்வேலி மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம்,தூத்துக்குடி மாவட்ட மைய நூலகர் ராம்சங்கர், நூலக வாசகர் வட்ட நிர்வாகிகள் உட்பட பலர்பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னை மக்கள் நலம் பெற தூத்துக்குடியில் வேள்வி பூஜை!
ஞாயிறு 10, டிசம்பர் 2023 6:17:19 PM (IST)

ஆலமரத்தை வெட்டி கடத்திய மர்ம நபர்கள் - விசாரணை நடத்த கோரிக்கை!
ஞாயிறு 10, டிசம்பர் 2023 6:14:09 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் காவலர் எழுத்து தேர்வு : 8 மையங்களில் நடைபெற்றது
ஞாயிறு 10, டிசம்பர் 2023 12:40:27 PM (IST)

பைக் மீது லாரி மோதி வாலிபர் சாவு: டிரைவர் கைது!
ஞாயிறு 10, டிசம்பர் 2023 12:37:30 PM (IST)

தொடர் மழை: தாமிரபரணி கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
ஞாயிறு 10, டிசம்பர் 2023 12:34:43 PM (IST)

நாசரேத் தூய யோவான் பெண்கள் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
ஞாயிறு 10, டிசம்பர் 2023 11:15:23 AM (IST)
