» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ரயில்வே நிலையத்தை நவீன மயமாக்க திட்டம்: மதுரை கோட்ட மேலாளர் ஆய்வு!

சனி 18, நவம்பர் 2023 5:13:08 PM (IST)



அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி ரயில்வே நிலையத்தை நவீன மயமாக்குவது குறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். 

மதுரை கோட்டத்தின் கீழ் தூத்துக்குடி உள்ளிட்ட 17 ரயில் நிலையங்கள் மத்திய அரசின் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் நவீன மயமாக்கப்பட உள்ளது. இதையொட்டி தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இன்று மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா தலைமையிலான ரயில்வே அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். 

இந்த ஆய்வில் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் பசுமை பூங்கா அமைப்பது பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் சாலையை அகலப்படுத்தி பார்க்கிங் வசதி செய்வது பயணிகளுக்கான தங்கும்அறை சுகாதார வசதிகள் மேலும் தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு இன்னொரு நுழைவாயில் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர் மதுரை கோட்ட பொது மேலாளர் சரத் ஸ்ரீவத்வா செய்தியாளரிடம் பேசுகையில் "பாரத் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி ரயில் நிலையத்தை நவீனமயமாக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகள் அடுத்த ஆண்டு இறுதியில் முடிவடைய வாய்ப்புள்ளது. பணிகளின் கோரிக்கையை தொடர்ந்து தூத்துக்குடி பாலக்காடு இடையே விரைவில் பாலருவி லிங்க் எக்ஸ்பிரஸ் இயக்க நடவடிக்கை மதுரை கோட்டம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் மதுரையில் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்து போன்று இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் தீ விபத்துக்கள் ரயிலில் ஏற்படுவதை தடுக்க பயணிகள் ரயிலில் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பட்டாசுகள் சிலிண்டர்கள் உள்ளிட்ட தீ பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்வது சட்டப்படி குற்றமாகும். எனவே பயணிகள் தீ பிடிக்கக்கூடிய பொருட்களை ரயில் பெட்டிகளில் கொண்டு செல்லக்கூடாது என கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்தார் மேலும் தூத்துக்குடி அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு ரயில் பாதை அமைக்கும் பணிகள் அடுத்த கட்டமாக நடைபெறும் என தெரிவித்தார்.


மக்கள் கருத்து

AahaanNov 20, 2023 - 09:57:55 AM | Posted IP 172.7*****

Traina vidunga pa kilaviki yen alangaram

SakthivelNov 20, 2023 - 09:16:49 AM | Posted IP 172.7*****

Note this news,Palaruv Express no Extension to Thoothukudi/ Tuticorin Link Express please note this news All

கர்ணராஜ்Nov 19, 2023 - 07:57:39 PM | Posted IP 172.7*****

ரயில்வே ஸ்டேஷன் மீளவிட்டானுக்கு மாற்றப் பட்டால் ரயில்கள் எண்ணிக்கை அதிகரிக்க முடியும் மற்றும் வேகமான வந்தே பாரத் போன்றவை அனுமதி கிடைக்கும். மாநகர மக்கள் போக்குவரத்து இலகுவாக இருக்கும் மற்றும் க்ராசிங் விபத்துகள் குறையும்.

IndianNov 19, 2023 - 09:57:33 AM | Posted IP 162.1*****

Start Vande Bharath from Tuticorin to Chennai akin to Tirunelveli. Tuticorin is neglected by Railways since for a long time. Jai Hind

R.PradeepNov 19, 2023 - 09:46:53 AM | Posted IP 172.7*****

Palakkad express விரைவில் அறிவிக்க வேண்டும்

Bala muruganrNov 18, 2023 - 09:25:39 PM | Posted IP 172.7*****

Please open booking & Reservation counter for melur railway station. Tuti corin MP MLA MAYOR please note the point and recommend

கர்ணராஜ்Nov 18, 2023 - 06:10:35 PM | Posted IP 172.7*****

முதல்ல ரயில்வே ஸ்டேஷன் மஈளவஇட்டஆனஉக்கஉ மாற்றுங்கள். தினமும் பல முறை மாநகர நடுவில் இருக்கும் 4கேட்கள் பலமுறை மூடப்பட்டு போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ளது. ரயில்வே ட்ராக் ஐ நல்ல ரோடாக மாற்றி கேட்1 லிருந்து மீளவிட்டான்வரை ரோடு போட்டு மேலே மோனோரயில் விடுங்கள். மக்கள் மற்றும் நகர் வளர்ச்சிக்கு உதவும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ரத்தன் டாடா மறைவு: விவசாயிகள் அஞ்சலி!

வியாழன் 10, அக்டோபர் 2024 8:07:45 PM (IST)

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory