» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மது போதையில் 100-க்கு போன் செய்து பொய் புகார் அளித்த 2 பேர் கைது!

செவ்வாய் 3, அக்டோபர் 2023 7:59:51 AM (IST)

தூத்துக்குடி அருகே மது போதையில் 100-க்கு போன் செய்து பொய்யான புகார் அளித்த 2பேரை போலீசார் கைது செய்தனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே உள்ள சிவத்தையாபுரம் கோபாலகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் அருள் பிரகாஷ் (42). அதே ஊர் சாமி கோவில் தெருவை சேர்ந்த காமராஜ் மகன் சிவகண்ணா (20) மற்றும் நடுவைக்குறிச்சி மெயின் ரோட்டை சேர்ந்த ஜெயசுராஜ் மகன் பாண்டியராஜ். 

இவர்கள் 3 பேரும் நண்பர்கள். இவர்கள் சாயர்புரம் தேரி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிக்கொண்டு அங்குள்ள ஒரு இடத்துக்கு சென்று மதுஅருந்தினர். பின்னர் போதையில் அருள் பிரகாஷ், போலீஸ் உதவி எண் 100-ஐ தொடர்புகொண்டு பாண்டியராஜை 5 பேர் கடத்தி செல்வதாக என்று தகவல் தெரிவித்து உள்ளார். பின்னர் அருள் பிரகாஷ் மோட்டார் சைக்கிளில் சிவகண்ணாவை ஏற்றிக்கொண்டு மீன் சந்தை அருகே இறக்கி விட்டு சென்று விட்டார்.

அதன்பிறகு சிவகண்ணா, செல்வம் என்பவரை அழைத்துக் கொண்டு பாண்டியராஜ் வீட்டுக்கு சென்று அவரது மனைவி ஜெனிட்டா மேரியிடம், உங்களது கணவர் பாண்டியராஜை 5 பேர் காரில் கடத்தி சென்று விட்டதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெனிட்டாமேரி சாயர்புரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சிவகண்ணாவை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் மது போதையில் 100-க்கு போன் செய்து பொய்யான தகவலை அளித்ததாக தெரிவித்தார். இதையடுத்து சிவகண்ணா, அருள்பிரகாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital








Thoothukudi Business Directory