» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வானிலை மையம் எச்சரிக்கை : தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!
திங்கள் 2, அக்டோபர் 2023 4:10:37 PM (IST)

வானிலை மையம் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் காற்று வீச்சு மாறுபாடு காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
இதனை தொடர்ந்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 265 விசைப்படகுகள் மூலம் வழக்கமாக செல்லக்கூடிய மீனவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை முதல் வேம்பார் வரை உள்ள மீனவர்கள் இன்று 2-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. மேலும் நாளை 3ம் தேதி கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி துறைமுகத்தில் மீனவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை: 3பேர் கைது!
வெள்ளி 1, டிசம்பர் 2023 8:06:04 AM (IST)

சப் ஜூனியா், ஜூனியா் ஆடவா் ஹாக்கி : செயில் ஹாக்கி அணிகள் சாம்பியன்
வெள்ளி 1, டிசம்பர் 2023 7:55:09 AM (IST)

அதிமுக குறித்துப் பேச டிடிவி தினகரனுக்கு உரிமை இல்லை: கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ
வெள்ளி 1, டிசம்பர் 2023 7:51:56 AM (IST)

திருச்செந்தூா் பக்தா் பலி : பா.ஜ.க. ஆா்ப்பாட்டம்!
வெள்ளி 1, டிசம்பர் 2023 7:46:44 AM (IST)

தூத்துக்குடியில் பைக் திருடிய 2 பேர் கைது!
வியாழன் 30, நவம்பர் 2023 9:43:04 PM (IST)

அகில இந்திய பெஞ்ச் பிரஸ் போட்டியில் பதக்கம் வென்று தூத்துக்குடி வீரர்கள் சாதனை
வியாழன் 30, நவம்பர் 2023 9:32:11 PM (IST)
