» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத்தில் அகில பாரத இந்து மகா சபா சார்பாக விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை!
திங்கள் 18, செப்டம்பர் 2023 12:35:11 PM (IST)
நாசரேத் பகுதியில் விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு இன்று விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் காவல் நிலையத்திற்குட்பட்ட மணிநகர், ஞானராஜ்நகர், கந்தசாமிபுரம், நாசரேத் கே.வி.கே.சாமி சிலை பஜார், வடலிவிளை ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலைகள் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. நாசரேத் அருகிலுள்ள வடலிவிளை கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இன்று அனைத்து சிலைகளும் நாசரேத் சக்தி விநாயகர் ஆலயம் முன்பாக மாலையில் புறப்பட்டு மெஞ்ஞானபுரம்,உடன்குடி, குலசே கரப்பட்டிணம் வழியாக திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக் கோவில்கடற்கரையில் விஜர்சனம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அகில பாரத இந்து மகா சபா மாவட்ட செயலாளர் ராம்குமார் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.