» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி கடற்கரையில் தூய்மை பணி: மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு!
ஞாயிறு 17, செப்டம்பர் 2023 10:00:50 AM (IST)

தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் தூய்மை பணி நடைபெற்றது.
உலகம் முழுவதும் செப்டம்பர் மாதம் 3-வது சனிக்கிழமை சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தேசிய பசுமை படை மூலமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 14 கடற்கரை மாவட்டங்களில் உள்ள கடற்கரைகள் தூய்மைப்படுத்தப்படுகிறது.
அதன்படி தூத்துக்குடி விவேகானந்தர் காலனி,இனிகோ நகர், திரேஸ்புரம் ஆகிய கடற்கரை பகுதியில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் தினேஷ்குமார் முன்னிலையில் தூய்மைப் பணி நடைபெற்றது. இதில், மாநகராட்சி தூய்மை காவலர்கள், காமராஜ் கல்லூரி, தூய மரியன்னை ஹோலி கிராஸ் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில், நூறு டன் அளவிலான குப்பைகள் அகற்றப்பட்டது.ப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மேயருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 9:23:02 PM (IST)

சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை சார்பில் இருதய விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெள்ளி 29, செப்டம்பர் 2023 9:16:24 PM (IST)

பெண் குழந்தைகளைக் காப்போம் பயிலரங்கம் : எஸ்பி துவக்கி வைத்தார்!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:37:35 PM (IST)

தூத்துக்குடியில் செவிலியர் கல்லூரி தொடங்க வேண்டும்: அமைச்சர் கீதாஜீவன் கோரிக்கை
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:29:00 PM (IST)

விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:24:58 PM (IST)

அரியநாயகிபுரம் பள்ளியில் புதிய வகுப்பறைகள் அடிக்கல் நாட்டு விழா!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:20:28 PM (IST)
