» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மூவேந்தர்களின் வம்சாவழியினர் நாடார்கள்: ஆதாரமான ஓலைச்சுவடி கண்டுபிடிப்பு!!
வெள்ளி 26, மே 2023 7:51:56 AM (IST)
மூவேந்தர்களின் வம்சாவழியினர் நாடார்கள் என்பதற்கு ஆதாரமான ஓலைச்சுவடி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறை பேராசிரியர் சு.தாமரைப்பாண்டியன் கூறினார்.

அதில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த "ஆதி பூர்வீக மண்டல் காட்டு ராசாவாகிய மூலப்புலிக்கொடியோன் பூர்வீக வரலாறு" எனும் ஓலைச்சுவடியும் கிடைத்து உள்ளது. அந்த சுவடியில் காலம் மற்றும் நூலை இயற்றிய ஆசிரியர் பற்றிய குறிப்புகள் எதுவும் காணப்படவில்லை. ஆனாலும் பிரதி ஓலைச்சுவடியின் பழமை வடிவ நிலை அடிப்படையில் சுவடி எழுதப்பட்டது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. மூலச்சுவடியின் காலம் அதற்கும் முந்தையது என்பதில் ஐயம் இல்லை. எனினும் நூலில் உள்ள வரலாறுகள் நடைபெற்ற காலம் 11-ம் நூற்றாண்டு முதல் 18-ம் நூற்றாண்டு வரையிலானது ஆகும்.
இந்த சுவடியில் மூவேந்தர்களின் வழித்தோன்றல்கள் நாடார்கள் என்பதை உறுதிபடுத்தும் வகையிலான கருத்துகள் உள்ளன. சோழர் குல வலங்கை சான்றோர் மக்களின் தோற்றவரலாறு இந்த சுவடியின் முதல் பகுதியில் கூறப்பட்டு உள்ளது. இந்த சுவடி புலிக்கொடியோனின் வம்சாவழியினரின் வரலாற்றை சுருக்கமாகக் கூறுகிறது. இந்த நூலை இயற்றியவர் வித்துவான் ச.செந்தமிழ்ச்செல்வன் என்பதை அறிய முடிகிறது. கிடைத்துள்ள சுவடி சோழர் வரலாற்றுடன் தொடர்புடையது என்பதால் வரலாற்று முக்கியத்துவமானதாக அமைந்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
Balance nadarமே 28, 2023 - 08:46:28 PM | Posted IP 172.7*****
Kalvettu irunthaal naam yar entru ulagukku theriyum.
நாங்கள்மே 28, 2023 - 03:33:57 PM | Posted IP 162.1*****
திருட்டு பரம்பரை அல்ல என்று மார் தட்டி கொள்வோம்...
ஜெயபிரகாஷ் ஜெமே 27, 2023 - 10:40:15 AM | Posted IP 172.7*****
உங்கள் அன்பே என் சமுதாயத்திற்கு மிகப்பெரிய ஒன்று ஏனென்றால் என்னை போன்ற நமது சமுதாய இளைஞர்களுக்கு பெரும்பாலான நமது சமுதாயத்தின் வரலாறு தெரிந்ததே இல்லை நாம் தான் மூவேந்தர்களின் வரி தோன்றவில்லை என்று கூட நாம அறிவதில்லை.உங்களைப் போன்றவருக்கு நாங்கள் எல்லோரும் நன்றி ஐயா கடமைப்பட்டுள்ளோம் நன்றி ஐயா.
RAMESH Sமே 27, 2023 - 09:51:15 AM | Posted IP 172.7*****
ஆறுமுகநேரி காரன் என்பதில் பெருமை கொள்கிறேன்
அய்யாமே 26, 2023 - 03:21:52 PM | Posted IP 162.1*****
நம்ம வரலாறு இப்போ வேண்டாம்... இனிமே வரலாறு எழுதுவோம்... நாடார்கள் இப்படி என்று... நம்ம வரலாறு எப்படி வேண்டுமானால் இருக்கட்டும்..
V.S.S. பிரதாபன் , வாணுபன்விளை மூலைப்பொழி குடும்பத்தின்3/8 பங்காளி.மே 26, 2023 - 02:24:00 PM | Posted IP 172.7*****
தாங்கள் பதிவு செய்துள்ள ஓலைசுவடி எங்கள் குடும்ப வரலாறு .கரையானுக்கு இறையானது போக மிஞ்சியது. எங்கள் தாத்தா திரு V.S.சண்முகதிரவியநாடார் ( முன்னாள் தலைவர் தக்ஷ்னமாற நாடார் சங்கம் , முன்னாள் உறுப்பினர் திருநெல்வேலி ஜில்லா போர்டு ) அவர்களின் பூட்டனார் வரை எழுதப்பட்டுள்ளது .எங்கள் குடும்பத்தின் மூத்த வாரிசான மூலைப்பொழி கிராமிசு நாடார் பெட்டகத்தில் இருந்தது .
மேலும் தொடரும் செய்திகள்

கடலோர கிராம பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்!!
செவ்வாய் 30, மே 2023 9:08:02 PM (IST)

வட மாநிலதொழிலாளர்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு
செவ்வாய் 30, மே 2023 9:01:40 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் 32 ஏக்கர் பரப்பளவில் பல்லுயிர் பூங்கா
செவ்வாய் 30, மே 2023 7:59:19 PM (IST)

வருவாய்த்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 30, மே 2023 7:46:16 PM (IST)

தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!
செவ்வாய் 30, மே 2023 5:36:50 PM (IST)

மணிமேகலை விருதுபெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 30, மே 2023 4:27:42 PM (IST)

பாரதிமே 29, 2023 - 08:26:28 AM | Posted IP 172.7*****