» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அனுமதி இன்றி செயல்பட்ட 2 மதுபான பார்களுக்கு சீல்

வெள்ளி 26, மே 2023 7:48:09 AM (IST)

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் அனுமதி இன்றி செயல்பட்ட 2 மதுபான பார்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

தூத்துக்குடி முத்தையாபுரம் வடக்கு தெரு மற்றும் ஸ்பிக் நகரில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு அருகில் உள்ள 2 பார்கள் அரசு அனுமதி இன்றி செயல்பட்டு வந்ததாக புகார் எழுந்தது. இந்த நிலையில் அரசு அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த அந்த 2 பார்களையும் தாசில்தார் பிரபாகரன் தலைமையில் தூத்துக்குடி நகர டிஎஸ்பி சத்யராஜ், வருவாய்த்துறை ஆய்வாளர் சரவணவேல்ராஜ், முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மூக்கன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் ஆகியோர் நேற்று இரவு பூட்டி 'சீல்' வைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads











Thoothukudi Business Directory