» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வடைக்கு சட்னி கொடுக்காததால் டீ கடை காரக்கு அரிவாள் வெட்டு : தூத்துக்குடியில் பரபரப்பு
புதன் 24, மே 2023 11:43:44 AM (IST)
தூத்துக்குடியில் வடைக்கு சட்னி கொடுக்காததால் டீக்கடைக்காரரை அரிவாளல் வெட்டிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
தூத்துக்குடி 3வது மைல் அருகே உள்ள சங்கர் காலணியில் வசிப்பவர் சுப்ரமணியன். இவரது மகன் உதயசங்கர் (26). இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை டீக்கடையில் இருந்த போது பைக்கில் வந்த 3பேர் கொண்ட கும்பல் வடை சாப்பிட்டார்களாம். அப்போது வடைக்கு சட்னி கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு உதய சங்கர் சட்னி இல்லை என்றாராம். இதனால் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் தங்களது பைக்கில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வந்து உதயகுமாரை சரமாரியாக வெட்டினார்களாம். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் காயம் அடைந்த உதயகுமார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர், இது சம்பந்தமாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து பைக்கில் வந்த 3பேர் கொண்ட கும்பலை தேடி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடலோர கிராம பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்!!
செவ்வாய் 30, மே 2023 9:08:02 PM (IST)

வட மாநிலதொழிலாளர்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு
செவ்வாய் 30, மே 2023 9:01:40 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் 32 ஏக்கர் பரப்பளவில் பல்லுயிர் பூங்கா
செவ்வாய் 30, மே 2023 7:59:19 PM (IST)

வருவாய்த்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 30, மே 2023 7:46:16 PM (IST)

தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!
செவ்வாய் 30, மே 2023 5:36:50 PM (IST)

மணிமேகலை விருதுபெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 30, மே 2023 4:27:42 PM (IST)

ஆண்டமே 24, 2023 - 06:53:42 PM | Posted IP 162.1*****