» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவிலில் சீமான் தரிசனம்: தங்கவேல் காணிக்கையாக வழங்கினார்..!
வெள்ளி 19, மே 2023 9:12:20 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சுவாமி தரிசனம் செய்தார்.
நாம் தமிழர் கட்சி தொடங்கி 13 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்றார். அவர் இரண்டடி நீளம் உள்ள தங்கவேல் காணிக்கையாக வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "தமிழகத்தில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் கல்விக்காக நகைகளை அடகு வைக்கும சூழல் நிலவுகிறது. ஆனால் தமிழக அரசோ விஷச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு 10 லட்சம் நிதி வழங்குகிறது. ஜல்லிகட்டு தீர்ப்பை உளம் மகிழ்ந்து வரவேற்கிறேன். ஜல்லிகட்டு என்பது 5ஆயிரம் ஆண்டு மரபு. சிவன் கோவிலில் கூட முன்பு காளைதான் உள்ளது
கர்நாடகா தேர்தலில் பா.ஜ.கவை காங்கிரஸ் வென்றது பெரிய விசயம் அல்ல. 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில்தான் நாசகார திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. குறிப்பாக ஜி.எஸ்.டி., நீட் என பல நடைமுறைகள் கொண்டுவரப்பட்டது. தற்போதை பா.ஜ.க அரசு அதனை செயல்படுத்தி வருகிறது. பா.ஜ.கவுக்கு மாற்று காங்.கிடையாது. அந்தந்த மாநில கட்சிகள் தான் பா.ஜ.கவுக்கு எதிர்ப்பாக இருக்க முடியும் என்றார்.
மக்கள் கருத்து
JAIHINDமே 20, 2023 - 09:59:04 AM | Posted IP 172.7*****
கிறிஸ்தவ மிஷனரியின் ஏமாற்று வேலை நடிப்பு விடியல் அரசை / டயர் நக்கியை மிஞ்சிவிடும்.....
மேலும் தொடரும் செய்திகள்

கடலோர கிராம பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்!!
செவ்வாய் 30, மே 2023 9:08:02 PM (IST)

வட மாநிலதொழிலாளர்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு
செவ்வாய் 30, மே 2023 9:01:40 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் 32 ஏக்கர் பரப்பளவில் பல்லுயிர் பூங்கா
செவ்வாய் 30, மே 2023 7:59:19 PM (IST)

வருவாய்த்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 30, மே 2023 7:46:16 PM (IST)

தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!
செவ்வாய் 30, மே 2023 5:36:50 PM (IST)

மணிமேகலை விருதுபெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 30, மே 2023 4:27:42 PM (IST)

ennaமே 21, 2023 - 03:30:11 PM | Posted IP 162.1*****