» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முறையாக இயங்காத தனியார் பஸ்கள் உரிமத்தை ரத்து செய்ய பொதுமக்கள் கோரிக்கை!
வெள்ளி 17, மார்ச் 2023 4:12:02 PM (IST)

தூத்துக்குடி சேர்வைக்காரன்மடம் ஊராட்சி பகுதியில் முறையாக இயங்காத தனியார் பஸ்களின் உரிமைத்தை ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி வழியாக செல்லும் தனியார் பஸ்கள் அரசு நிர்ணயித்த நேரங்களில் செயல்படுவதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கிராமமக்கள் திருச்செந்தூர் கோவில் மற்றும் இரவு நேரங்களில் தூத்துக்குடி மற்றும் ஏரலில் இருந்து ஊர் திரும்ப முடிவதில்லை. வசந்த விளாஸ் பஸ் காலை 5மணிக்கு சேர்வை காரன்மடம் வழியாக தூத்துக்குடி செல்வதில்லை. இப்பேருந்து தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் காலை 6.15 மணிக்கு வருவதில்லை. இரவு 9.00மணிக்கு ஊராட்சி வழியாக தூத்துக்குடி சென்று பின் இரவு 11.00மணிக்கு ஊராட்சி வழியாக ஏரல் செல்வதில்லை.
தனியார் பேருந்து சரோஜ் செல்வம், காலை 6.45 மணிக்கு ஊராட்சி வழியாக தூத்துக்குடியிலிருந்து நாசரேத் செல்லும் சரோஜ் செல்வம் பேருந்து இயங்குவதில்லை. இரவு ஊராட்சி வழியாக 9:30 மணிக்குதூத்துக்குடி செல்லுவதில்லை. மேலும், RBS1 பேருந்து இரவு நேரம் சுப்பிரமணியபுரத்திலிருந்து 8மணிக்கு ஊராட்சி வழியாக தூத்துக்குடி செல்லும் பேருந்து இயங்குவதில்லை. திரும்ப தூத்துக்குடியில் இருந்து 9:30க்கு ஊராட்சி வழியாக சுப்பிரமணியபுரம் செல்வதில்லை. இரவு திரும்ப 10மணிக்கு ஊராட்சி வழியாக தூத்துக்குடி செல்வதில்லை. எனவே முறையாக இயங்காத தனியார் பேருந்துகளின் உரிமைத்தை ரத்து செய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி ஆசிரியரை தாக்கியதாக மாணவனின் பெற்றோர் உட்பட 4பேர் கைது!
செவ்வாய் 21, மார்ச் 2023 8:28:04 PM (IST)

டி.சி.டபிள்யூ. சார்பில் உலக காடுகள் தினவிழா!
செவ்வாய் 21, மார்ச் 2023 7:45:25 PM (IST)

தமிழக பட்ஜெட் ஏமாற்றம்: அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 21, மார்ச் 2023 5:38:17 PM (IST)

தூத்துக்குடியில் வீடு புகுந்து 13 பவுன் நகை திருடிய வாலிபர் கைது - நகைகள் மீட்பு
செவ்வாய் 21, மார்ச் 2023 5:31:38 PM (IST)

தேர்வு கட்டண உயர்வு வாபஸ்: மாணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
செவ்வாய் 21, மார்ச் 2023 3:55:07 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது குறித்து ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு!
செவ்வாய் 21, மார்ச் 2023 3:28:26 PM (IST)

ராஜாMar 19, 2023 - 03:48:34 AM | Posted IP 162.1*****