» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வடமாநில தொழிலாளர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை: டி.ஐ.ஜி., எஸ்பி அறிவுறுத்தல்!

வியாழன் 9, மார்ச் 2023 2:59:56 PM (IST)



தூத்துக்குடியில் வடமாநில தொழிலாளர்கள் அச்சமின்றி பணியாற்றலாம் என திருநெல்வேலி சரக  டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார், எஸ்பி பாலாஜி சரவணன் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தூத்துக்குடி தெர்மல்நகர் என்.டி.பி.எல் அனல்மின் நிலையத்தில் சுமார் 250க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேற்படி வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வரும் என்.டி.பி.எல் அனல்மின் நிலைய வளாகத்திற்கு இன்று (09.03.2023) திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் ஆகியோர் நேரடியாகச் சென்று அங்கு பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களிடம் அவர்களுக்கு புரிவதற்காக இந்தி மொழியிலேயே கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது காவல்துறை அதிகாரிகள் பேசுகையில், தற்போது வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியை பார்த்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும், அது தமிழ்நாட்டில் நடைபெறவில்லை என்றும், தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தங்கள் பகுதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போலீசார் உட்பட அனைத்து காவல் நிலைய போலீசாரும் உங்களது பாதுகாப்பிற்கு எந்த நேரத்திலும் உள்ளோம். 

நீங்கள் உங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்று வர அச்சப்படத் தேவையில்லை என்றும், உங்கள் பணியின் போது விதிமுறைகளின் படி பாதுகாப்பு உபகரணங்களை கையாண்டு கவனத்துடன் பணிபுரியுமாறும் எடுத்துரைத்தனர். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் மாவட்ட காவல்துறை அறிமுகப் படுத்தப்பட்டு உள்ள புதிய உதவி அலைபேசி எண் 82493 31660 என்ற எண் குறித்தும், 

இந்த எண்ணை தொடர்பு கொண்டு உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலோ குறைகள் இருந்தாலோ தகவல் தெரிவித்தால் நீங்கள் இருக்குமிடத்திற்கு உடனடியாக காவல்துறையினர் விரைந்து வந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்றும், தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் இடங்களுக்கு காவல்துறை அதிகாரிகள் அவ்வப்போது நேரில் சென்று, அவர்களது குறைகளை கேட்டறிந்து, அவர்களுக்குரிய பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் என்றும் தெரிவித்தனர்.

இந்நிகழ்வின் போது தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம், முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் உட்பட காவல்துறையினர் ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

ஆண்டMar 9, 2023 - 03:12:20 PM | Posted IP 162.1*****

பரம்பரைகள் அடிச்சிட்டு சாவானுங்க... நீங்க நல்லபடியா வேலை பாருங்கள்... இந்தி நண்பர்களே...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory