» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் விஷம் கலந்த அரிசியை தின்ற 3 ஆடுகள் சாவு: போலீசார் விசாரணை

சனி 4, பிப்ரவரி 2023 3:19:27 PM (IST)

தூத்துக்குடியில் விஷம் கலந்த அரிசியை தின்ற 3 ஆடுகள் உயிரிழந்தன.

தூத்துக்குடி தாளமுத்து நகர் துப்பாஸ்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (56). விவசாயி. இவருக்கு சொந்தமான ஆடுகளை வெள்ளப்பட்டி மற்றும் தாளமுத்து நகர், தருவை குளம் ரோடு மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளிட்ட பகுதிகளில் மேய்ச்சலுக்காக விடுவது வழக்கம்.

இதேபோல் நேற்று மேச்சலுக்காக சென்ற ஆடுகள் அப்பகுதியில் விஷம் கலந்து வைக்கப்பட்டிருந்த அரிசியை தின்றுள்ளது. இதில் 3 ஆடுகள் இறந்தது. இதுகுறித்து வெள்ளைச்சாமி தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து அரிசியில் விஷம் வைக்கப்பட்டதா? அதனை வைத்தது யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory