» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விமானத்தில் பறந்த தூத்துக்குடி பள்ளி மாணவர்கள்!

சனி 4, பிப்ரவரி 2023 11:45:42 AM (IST)தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முற்றிலும் இலவசமாக விமானம் மூலம் சென்னைக்கு கல்விச் சுற்றுலா சென்று வந்தனர்.

தூத்துக்குடியில் உள்ள அரசு உதவி பெறும் பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியை ரமா தனது வகுப்பில் படிக்கும் மாணவர்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வதற்கும் உறவினர் வீட்டு சடங்குகளுக்கு செல்வதற்கும் பள்ளிக்கு விடுமுறை எடுப்பதைக் கண்டு இனிமேல் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வரும் மாணவர்களை விமானத்தில் அழைத்துச் செல்வதாக வாக்களித்தார். 

அதற்கு நல்ல பலன் கிடைத்து மாணவர்கள் விடுமுறை எடுப்பது குறைந்தது. எனவே மாணவர்களை சென்னைக்கு அழைத்து செல்வதென முடிவு எடுத்து பள்ளி செயலர் ஏபிசிவீ. சண்முகம் அவர்களிடம் ஆலோசித்ததில் மகிழ்ச்சியுடன் அனுமதி தந்ததுடன் பயணச்செலவில் பள்ளி நிர்வாகமும் பங்களிப்பதாக கூறினார்கள். மேலும் ஒரு நன்கொடையாளர் உதவி அளிக்க முன்வந்தார்.

எனவே வகுப்பில் உள்ள 12 மாணவர்களையும் விமானத்தில் முற்றிலும் இலவசமாக சென்னைக்கு அழைத்து செல்வதென முடிவு எடுத்தார்கள். அதன்படி நேற்று காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் சென்றனர்.
அங்கு வண்டலூர் உயிரியல் பூங்கா, வள்ளுவர் கோட்டம், மெரீனா கடற்கரை, தமிழ்நாடு முதல்வர் அவர்களின் நலத்திட்ட புகைப்படக் கண்காட்சியையும் கண்டு களித்தனர். பின்னர் முத்து நகர் விரைவு ரயிலில் தூத்துக்குடி திரும்பினர்.

மாணவ, மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் பெருமகிழ்ச்சி அடைந்து ஆசிரியருக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தனர். பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மாரியப்பன், ஆவுடையப்பன்,  ரகுபதி, ஆறுமுகசாமி, சங்கரேஸ்வரி ஆறுமுகசாமி சங்கரபாகம், கெளரி சங்கர், ரவீந்திரன், மீனா ரவீந்திரன் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு, பரிசுப் பொருட்கள் கொடுத்து வாழ்த்தி அனுப்பி வைத்தனர். சுற்றுலாவில் மாணவர்களுடன் தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, ஆசிரியைகள் ரமா, சரஸ்வதி மற்றும் அந்தோணி ஆஸ்மின் ஆகியோர் சென்றிருந்தனர்.


மக்கள் கருத்து

MauroofFeb 6, 2023 - 12:37:20 PM | Posted IP 162.1*****

மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்...

ஏ.கணேசன்Feb 5, 2023 - 03:08:00 PM | Posted IP 157.4*****

வாழ்த்துக்கள். ஆசிரியை ரமா அவர்களின் சிறப்பான முயற்சி பாராட்டத்தக்கது. மாணவர்களை பெரிதும் உற்சாகப் படுத்தியிருக்கும்.

RoseFeb 4, 2023 - 11:56:24 PM | Posted IP 162.1*****

My school.. my teachers.. Rama miss (English).. dhaksinamoorthy sir (maths).. Saraswathi miss (social)..

ஆ.சண்முகசுந்தரம், தனசேகரன் நகர், தூத்துக்குடிFeb 4, 2023 - 04:04:47 PM | Posted IP 162.1*****

மாணவர்கள் கல்வியில் அக்கறை செலுத்தி ஊக்குவிக்கும் பளாளி செயலர்,தலைமை ஆசிரியர் ஆசிரியை ரமா மற்றும் பாரதியார் வித்தியாலயத்தின் அனைத்து ஆசிரியப்பெருமக்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்...‌

Cnayagam hm pasuvanthanaiFeb 4, 2023 - 03:09:56 PM | Posted IP 162.1*****

Valthukkal

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory