» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அலங்கார மீன்வளர்ப்பு மேலாண்மை பயிற்சி வகுப்புகள்!

சனி 4, பிப்ரவரி 2023 11:35:58 AM (IST)

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி சார்பில் "அலங்கார மீன்வளர்ப்பில் சிறந்த மேலாண்மை முறைகள்” குறித்து இரண்டு நாள் பயிற்சி  நடைபெற உள்ளது.

தூத்துக்குடி, மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மீன்வள விரிவாக்கம், பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறையின் மூலம் "அலங்கார மீன்வளர்ப்பில் சிறந்த மேலாண்மை முறைகள்” என்ற இரண்டு நாள் பயிற்சி 16.02.2023 முதல் 17.02.2023 வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் அலங்கார மீன்வளர்ப்பில் சிறந்த மேலாண்மை குறித்த பாடவகுப்புகளும், களப்பயிற்சிகளும் வழங்கப்படும். 

பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் பயிற்சி கட்டணமாக ரூ. 500∕- செலுத்தி பயிற்சி பெற்று பயனடையலாம். இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட அலைபேசி மற்றும் தொலைப்பேசி மூலமாக 15.02.2023 பிற்பகல் 5.00 மணிக்குள் தொடர்புக் கொண்டு தங்களுடைய பெயர்களை பதிவு செய்துக்கொள்ளலாம்

மீன்வளத்தொழில் முனைவோர் மேம்பாடு பயிற்சி

தூத்துக்குடி, மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மீன்வள விரிவாக்கம், பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறையின் மூலம் "மீன்வளத்தொழில் முனைவோர் மேம்பாடு” என்ற இரண்டு நாள் பயிற்சி 22.02.2023 முதல் 23.02.2023 வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் மீன்வளத்தொழில் முனைவோர் மேம்பாடு குறித்த பாட வகுப்புகளும், களப்பயிற்சிகளும் வழங்கப்படும். 

பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் பயிற்சி கட்டணமாக ரூ. 500∕- செலுத்தி பயிற்சி பெற்று பயனடையலாம்.  இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட அலைபேசி மற்றும் தொலைப்பேசி மூலமாக 21.02.2023 பிற்பகல் 5.00 மணிக்குள் தொடர்புக் கொண்டு தங்களுடைய பெயர்களை பதிவு செய்துக்கொள்ளலாம்.

தொடர்புக்கு: 

பேராசிரியர் மற்றும் தலைவர்
மீன்வள விரிவாக்கம், பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறை
மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி
தொலைப்பேசி: 0461 2340554
அலைபேசி: 99944 50663 ரூ 94431 26894
மின்னஞ்சல் : [email protected]


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory