» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு: மத்திய அரசுக்கு பயணிகள் நலச்சங்கம் நன்றி!

வெள்ளி 3, பிப்ரவரி 2023 5:15:01 PM (IST)

தூத்துக்குடி மணியாச்சி - மதுரை இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்த மத்திய அரசுக்கு பயணிகள் நலச்சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மணியாச்சி - மதுரை இரட்டை இரயில் பாதை பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதில் சிறு சிறு பணிகள் மட்டும் மீதமுள்ளது. இப்பணிகளுக்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.40கோடி ஒதுக்கப்படடுள்ளது. மேலும், மீளவிட்டான், மருதூர், விளாத்திகுளம், நாகலாபுரம், அருப்புகோட்டை, வழியாக மதுரைக்கு ரயில் பாதைக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.114கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு நிதி ஒதுக்கிய மத்திய அரசுக்கு தூத்துக்குடி பயணிகள் நலச்சங்கம் செயலாளர் பிரம்மநாயகம் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து

ஏரியா காரன்Feb 5, 2023 - 08:43:37 PM | Posted IP 162.1*****

ஏற்கனவே சென்னை செல்ல தினமும் இரண்டு ரயில்களை விடவேண்டும்.

MuthuFeb 3, 2023 - 08:03:34 PM | Posted IP 162.1*****

Super

[email protected]Feb 3, 2023 - 08:02:31 PM | Posted IP 162.1*****

Super

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory