» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த நாட்டுப்புறக் கலைஞர் நெல்லை தங்கராஜ் காலமானார்

வெள்ளி 3, பிப்ரவரி 2023 12:11:19 PM (IST)பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த நாட்டுப்புற கலைஞர் நெல்லை தங்கராஜ் உடல் நலக் குறைவால் இன்று (பிப். 3) காலை காலமானார்.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு பரியேறும் பெருமாள் வெளியானது. இந்த திரைப்படத்தின் கதாநாயகனின் தந்தையாக நெல்லை தங்கராஜ் நடித்திருந்தார். நிஜத்தில் நாட்டுப்புறக் கலைஞரான இவர், பரியேறும் பெருமாள் படத்திலும் தெருக்கூத்து கலைஞரான நடித்திருந்தார். படத்தில் இவரின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. 

தங்கராஜ் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ஒரு மின்சார வசதியில்லாத வீட்டில் வசித்து வந்தார். பரியேறும் பெருமாள் படத்தைத் தொடர்ந்து அவருக்கு அரசு சார்பில் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. மேலும், தங்கராஜ் மகளுக்கு ஆட்சியர் விஷ்ணு சிறப்பு உதவியாக அரசு அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணி நியமனம் செய்து கொடுத்தார்.

இந்நிலையில், உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு தங்கராஜ் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இவருக்கு பேச்சுக்கணி என்ற மனைவியும் அரசிளம் குமரி என்ற மகளும் உள்ளனர். அவரது உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என கூறப்படுகிறது. வண்ணாரப்பேட்டை இளங்கோ நகரில் உள்ள இல்லத்தில் தங்கராஜ் உடல் வைக்கப்பட்டு உறவினர்கள் பொதுமக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory