» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அண்ணா நினைவு தினம்: மேயர் ஜெகன் பெரியசாமி மரியாதை!

வெள்ளி 3, பிப்ரவரி 2023 11:58:08 AM (IST)தூத்துக்குடியில் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடியில் அண்ணாவின் 54வது நினைவு நாளையொட்டி காய்கனி மார்க்கெட் அருகிலுள்ள அண்ணாசிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநகராட்சி மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், வக்கீல் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமுவேல், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதிமுக சார்பில் காமராஜ் காய்கனி மார்க்கெட் அருகிலுள்ள அண்ணாசிலைக்கு மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி தலைமையில் மாலை அணிவித்தனர். இதில், மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் பேச்சிராஜ், மீனவரணி அமைப்பாளர் நக்கீரன், இலக்கிய அணி மகாராஜன், மாவட்ட மீனவரணி தொம்மை, எம்.எல்.எப் செல்வராஜ், பொன்ராஜ், அனல்டேவிட், செல்லப்பா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory