» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டிராக்டர் கவிழ்ந்து விபத்து: விவசாயி பரிதாப சாவு
வெள்ளி 3, பிப்ரவரி 2023 11:10:14 AM (IST)
தூத்துக்குடி அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி அருகே உள்ள காசிலிங்க புரத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி மகன் ராஜா (49). விவசாயி, இவர் நேற்று புல் அறுக்கு எந்திரத்த்தை ஏற்றிக் கொண்டு பொட்டலூரிலிருந்து செக்காரக்குடிக்கு டிராக்டரை ஓட்டி சென்றார். கொம்புகாரநத்தம் கிராமம் அருகே சென்றபோது டிராக்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த ராஜா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முறப்பநாடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜமால் சம்பவ இடத்துக்கு சென்று உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி ஆசிரியரை தாக்கியதாக மாணவனின் பெற்றோர் உட்பட 4பேர் கைது!
செவ்வாய் 21, மார்ச் 2023 8:28:04 PM (IST)

டி.சி.டபிள்யூ. சார்பில் உலக காடுகள் தினவிழா!
செவ்வாய் 21, மார்ச் 2023 7:45:25 PM (IST)

தமிழக பட்ஜெட் ஏமாற்றம்: அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 21, மார்ச் 2023 5:38:17 PM (IST)

தூத்துக்குடியில் வீடு புகுந்து 13 பவுன் நகை திருடிய வாலிபர் கைது - நகைகள் மீட்பு
செவ்வாய் 21, மார்ச் 2023 5:31:38 PM (IST)

தேர்வு கட்டண உயர்வு வாபஸ்: மாணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
செவ்வாய் 21, மார்ச் 2023 3:55:07 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது குறித்து ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு!
செவ்வாய் 21, மார்ச் 2023 3:28:26 PM (IST)
