» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பாலியல் தொல்லை : போக்சோவில் ஒருவர் கைது!

வெள்ளி 3, பிப்ரவரி 2023 8:30:44 AM (IST)

உடன்குடி அருகே 10 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை அடுத்த மெஞ்ஞானபுரம் அருகே உள்ள தாய்விளையை சேர்ந்தவர் தேவராஜ் (38). திருமணம் ஆனவர். இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் 10 வயது சிறுமி ஆடு மேய்க்கச் சென்ற தனது தாயாரை பார்க்கச் சென்றபோது, தேவராஜ் திடீரென்று சிறுமியை வழிமறித்து வாயை பொத்தி அருகில் இருந்த காட்டுப்பகுதிக்குள் தூக்கி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. 

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அவளது தாய் அங்கு கூச்சலிட்டவாறு ஓடி வந்தார். அவரை பார்த்ததும் தேவராஜ் அங்கிருந்து ஓடி விட்டார். இதுகுறித்து சிறுமியின் தாயார் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, தேவராஜை கைது செய்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory