» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி சாலை பணியில் ஊழல்: பொதுமக்கள் குற்றச்சாட்டு!
வியாழன் 2, பிப்ரவரி 2023 10:18:20 AM (IST)

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தரமற்ற சாலைகள் அமைக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்ட காமராஜர் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து வெளியே தெரிகின்றன. இதனால் வாகனங்கள் குண்டும் குழியுமாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் சாலை மேலும் பழுதடைய வாய்ப்புள்ளது. இதனால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தரமற்ற சாலைகள் அமைக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை தலைவர் சத்யா லட்சுமணன் கூறுகையில், "தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. பல நூறு கோடி செலவில், பிரதான தார் சாலைகள் கான்கிரீட் சாலைகளாக மாற்றப்பட்டு வருகிறது. தூத்துக்குடி விவிடி ரோடு, விஇ ரோடு, பாலவிநாயகர் கோவில் தெரு, தேவர்புரம் ரோடு, காமராஜர் சாலை மற்றும் பண்டுகரை சாலை, 3வது மைல் முதல் பீச் ரோடு வரை சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது.

மாநகராட்சி மூலம் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி சாலைப் பணிகளில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளது. இதனால் சாலைகள் தரமற்றதாக உள்ளன. குறிப்பாக, சுமார் ரூ.15கோடி மதிப்பீட்டில் 3 மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்ட காமராஜர் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து வெளியே தெரிகின்றன. விஇ சாலையிலும் சாலைகள் சரிவர அமைக்காததால் ஒட்டுப்போடும் வேலை நடந்து வருகிறது. மக்கள் வரிப்பணம் வீணாகிறது. எனவே ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகளை வரவழைத்து சாலைகளை ஆய்வு செய்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
TN69Feb 4, 2023 - 07:05:53 AM | Posted IP 162.1*****
இது மட்டுமா? ஸ்மார்ட்சிட்டி ரோடுகளை விட நடைமேடை ப்ளாட்பார்ம் தான் நல்ல அகலமாக இருக்குது! ரோட்டை காண்கல! ஆக்ரமிப்பு கடைகள், வணிக வளாகங்கள் அலுவலகங்கள், அரசியல் கட்சி அலுவலகங்கள் உள்ளன அதுகளை உடைச்சு அகற்றாமலே ஸ்மார்ட் சிட்டி திட்டம் தரம் குறைவாக உள்ளதும் மற்றும் ரோடுகளின் அளவுகள் நீளம் அகலம் குறைவாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது ஆகும் நம் தூத்துக்குடி மாநகராட்சியின் இயலாமையின் வெளிப்பாடை அப்பாவி மக்கள் அனுபவிக்கிறோம்
SeenivasagamFeb 4, 2023 - 04:51:47 AM | Posted IP 162.1*****
Thoothukudi city municipal corporation totaWaste
MauroofFeb 3, 2023 - 11:01:20 AM | Posted IP 162.1*****
திரு. மனிதன் என்ற பெயரில் பின்னூட்டம் செய்த சகோதரருக்கு. \வாய்ப்பேயில்லை, மாற்றம் என்றும் மாறாதது... ஓட்டு போட்டீங்களே அனுபவிங்க...// நாம் ஒன்றை நன்கு புரிந்துகொள்ள வேண்டும் நண்பரே, யார் தலைமையிலான ஆட்சி அமைந்தாலும் சரி. அரசு துறைகள் சார்ந்த அதிகார வர்க்கம் (அதாவது அரசு ஊழியர்கள் எனப்படும் யோக்கிய சிகாமணிகள் {விதிவிலக்குகள் உண்டு}) தத்தமது பொறுப்பு உணர்ந்து நேர்மையாக செயல்பட்டால் மட்டுமே மாற்றம் நிகழும். அதே சமயம் நடைபெறும் ஊழல்கள் ஒரு கூட்டு கொள்ளை (அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல் வியாதிகள் {விதிவிலக்குகள் அபூர்வம்})என்பதை மறுப்பதற்கில்லை. மாற்றம் ஒன்றே மாறாதது.
RajakumarFeb 3, 2023 - 09:16:10 AM | Posted IP 162.1*****
100% true, it’s sub standard road.
Aji antonyFeb 2, 2023 - 11:07:41 PM | Posted IP 162.1*****
It is True news
மனிதன்Feb 2, 2023 - 09:45:33 PM | Posted IP 162.1*****
வாய்ப்பேயில்லை, மாற்றம் என்றும் மாறாதது... ஓட்டு போட்டீங்களே அனுபவிங்க...
m.sundaramFeb 2, 2023 - 08:19:41 PM | Posted IP 162.1*****
It is Dravida Model construction.
GENERALFeb 2, 2023 - 05:22:29 PM | Posted IP 162.1*****
PLS PUT GOOD ROADS BECAUSE I HAVE MANY BACK PAIN ISSUES & LEG PAINS VERY EXPENSIVE
தமிழன்Feb 2, 2023 - 03:42:35 PM | Posted IP 162.1*****
பூரா முட்டாள். எல்லாம் திருட்டு திராவிட சில்லறை துட்டு பயலுக.
JeyaganthanFeb 2, 2023 - 02:10:14 PM | Posted IP 162.1*****
It is true.Performance review committee required immediarely
Miga sariFeb 2, 2023 - 02:01:18 PM | Posted IP 162.1*****
Migavum sariyana news.... managratchi itharku pathil solluma?
kannanFeb 2, 2023 - 12:41:01 PM | Posted IP 162.1*****
correct news
MauroofFeb 2, 2023 - 11:37:22 AM | Posted IP 162.1*****
இந்த இழிநிலை மாற வாய்ப்பே இல்லையா?...
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி ஆசிரியரை தாக்கியதாக மாணவனின் பெற்றோர் உட்பட 4பேர் கைது!
செவ்வாய் 21, மார்ச் 2023 8:28:04 PM (IST)

டி.சி.டபிள்யூ. சார்பில் உலக காடுகள் தினவிழா!
செவ்வாய் 21, மார்ச் 2023 7:45:25 PM (IST)

தமிழக பட்ஜெட் ஏமாற்றம்: அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 21, மார்ச் 2023 5:38:17 PM (IST)

தூத்துக்குடியில் வீடு புகுந்து 13 பவுன் நகை திருடிய வாலிபர் கைது - நகைகள் மீட்பு
செவ்வாய் 21, மார்ச் 2023 5:31:38 PM (IST)

தேர்வு கட்டண உயர்வு வாபஸ்: மாணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
செவ்வாய் 21, மார்ச் 2023 3:55:07 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது குறித்து ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு!
செவ்வாய் 21, மார்ச் 2023 3:28:26 PM (IST)

tuty sasiFeb 4, 2023 - 10:42:46 AM | Posted IP 162.1*****