» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையர் பொறுப்பேற்பு!

புதன் 1, பிப்ரவரி 2023 4:48:50 PM (IST)தூத்துக்குடி மாநகராட்சியில் பல ஆண்டுகளாக  நியமிக்கப்படாமல் இருந்த துணை ஆணையர் பதவியில் தற்போது சேலத்தைச் சேர்ந்த குமார் என்பவர் பொறுப்பேற்றுள்ளார்.  

இவர் குரூப் ஒன் தேர்வில் வெற்றி பெற்றவர்.  ஏற்கனவே வேலூர், தஞ்சாவூர் மாநகராட்சியின் ஆணையராக பதவி வைத்தவர். தற்போது மாநகராட்சிகள் அனைத்திலும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவதால், ஏற்கனவே மாநகராட்சி ஆணையராக இருந்த குமார் தற்போது தூத்துக்குடியின் துணை ஆணையராக பணி நியமனம் செய்யப்பட்டு வந்துள்ளார் 

தூத்துக்குடி மாநகராட்சியில் துணை ஆணையர் பதவி வெகுகாலமாக நிரப்பப்படாமல் இருந்ததால்  ஆணையர் சரி பார்த்த பின்பு தான் கோப்புகள்  கையொப்பமிடப்பட்டு வந்தது. தற்போது துணை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடியில் மாநகராட்சி பணிகள் விரைவாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது


மக்கள் கருத்து

MauroofFeb 3, 2023 - 11:04:30 AM | Posted IP 162.1*****

ஆஹா!... அரசியல்வாதிகள் போன்றே புகைப்படத்திற்கு பேனாவுடன் கம்பீரமாக காட்சி தருகிறார். வாங்க ஐயா வாங்க, தங்களது பொறுப்புகளை செவ்வனே நிறைவேற்றுங்கள். வாழ்த்துகள்.

P muruganFeb 2, 2023 - 09:55:15 AM | Posted IP 162.1*****

Velai vendum

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory