» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி துறைமுகத்தில் புதிதாக நிலக்கரி கையாளும் இயந்திரம் : முதல்வர் தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 31, ஜனவரி 2023 11:52:40 AM (IST)

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள நிலக்கரி கையாளும் இயந்திரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
எரிசக்தி துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்காக தூத்துக்குடி துறைமுகம் தளம் 1ல் புதிதாக நிறுவப்பட்டுள்ள அதிக திறன் கொண்ட 2 நிலக்கரி கையாளும் இயந்திரங்களின் பணிகள் துவங்கப்பட்டது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தூத்துக்குடி துறைமுகத்தில் புதிய இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, துறையின் செயலாளர், மின்சார வாரியத்தின் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், கலந்துகொண்டு, நவீன இயந்திர மயமாக்கப்பட்ட நிலக்கரி கையாளும் தளத்தினை பார்வையிட்டு தெரிவித்ததாவது: தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் புதுப்பித்து மேம்படுத்திய நவீன இயந்திரமயமாக்கப்பட்ட நிலக்கரி கையாளும் தளத்தின் மூலம் ரூ.80 கோடி சேமிக்கப்படும். மேலும் கையாளும் திறன் மற்றும் வேகம் அதிகரிக்கும். மேலும் உற்பத்தியும் அதிகரிக்கும். தூத்துக்குடி அனல்மின் நிலையம் இருப்பதால்தான் தென் தமிழகத்திற்கு அதிகளவில் முதலீடுகள் வருகிறது. இயற்கை பேரிடர்களின் தொடக்கத்தின் போதும், நிறைவின்போதும் மின்வாரிய பணியாளர்கள்தான் பணியாற்றுவார்கள். உங்களது பயணங்கள் தொடர்வதற்கும், வெற்றி பெறுவதற்கும் வாழ்த்துக்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி துறைமுக துணைத்தலைவர் பிமல்குமார்ஜா, தலைமைப்பொறியாளர் ரவிக்குமார், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தூத்துக்குடி அனல்மின்நிலைய செயற்பொறியாளர் (பொறுப்பு) ரவிச்சந்திரன், துறைமுக போக்குவரத்து மேலாளர் பிரபாகர், தலைமை இயந்திரப் பொறியாளர் சுரேஷ்பாபு, நிதிநிலை ஆலோசகர் மற்றும் தலைமைக் கணக்கு அலுவலர் சாகு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டில் அதிகப்படியான மின் உற்பத்தி அனல்மின் நிலையங்கள் மூலமாக கிடைக்கப் பெறுகிறது. நிலக்கரியை வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்கின்றனர். தற்போது நிலக்கரி கையாளும் இயந்திரங்களை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாடு மக்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைப்பதற்காக தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்காக அதிக கொள்ளளவில் நிலக்கரியை கையாளும் விதமாக ரூ.325 கோடி செலவில், நிலக்கரி கையாளும் இயந்திரங்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் நிறுவப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.80 கோடி சேமிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி ஆசிரியரை தாக்கியதாக மாணவனின் பெற்றோர் உட்பட 4பேர் கைது!
செவ்வாய் 21, மார்ச் 2023 8:28:04 PM (IST)

டி.சி.டபிள்யூ. சார்பில் உலக காடுகள் தினவிழா!
செவ்வாய் 21, மார்ச் 2023 7:45:25 PM (IST)

தமிழக பட்ஜெட் ஏமாற்றம்: அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 21, மார்ச் 2023 5:38:17 PM (IST)

தூத்துக்குடியில் வீடு புகுந்து 13 பவுன் நகை திருடிய வாலிபர் கைது - நகைகள் மீட்பு
செவ்வாய் 21, மார்ச் 2023 5:31:38 PM (IST)

தேர்வு கட்டண உயர்வு வாபஸ்: மாணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
செவ்வாய் 21, மார்ச் 2023 3:55:07 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது குறித்து ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு!
செவ்வாய் 21, மார்ச் 2023 3:28:26 PM (IST)
