» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் குடியரசு தின விழா!

வியாழன் 26, ஜனவரி 2023 6:17:33 PM (IST)தூத்துக்குடி வாகைக்குளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் 74வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

இந்தியாவின் 74வது குடியரசு தினவிழா நிகழ்ச்சி புனித மதர் தெரசா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஜஸ்பர் ஞானச்சந்திரன் தலைமை தாங்கினார். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதனையடுத்து இயக்குனர் ஜார்ஜ் கிளிங்டன் மற்றும் முதல்வர் முனைவர் ஜஸ்பர் ஞானச்சந்திரன் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். 

கல்லூரி பேராசிரியர்களும், அலுவலர்களும் மரியாதையை செய்தனர். பின்னர், முதல்வர் முனைவர் ஜஸ்பர் ஞானச்சந்திரன் குடியரசு தின வாழ்த்து செய்தி கூறினார். இதனையடுத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் இயக்குனர் ஜார்ஜ் கிளிங்டன், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாக மேலாளர் விக்னேஷ் செய்திருந்தார்.


மக்கள் கருத்து

அலெக்ஸ்Jan 27, 2023 - 10:05:54 AM | Posted IP 162.1*****

இருக்கிறது 6 பேரு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory