» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாலைகளில் திரிந்த 71 நாய்களுக்கு கருத்தடை : தூத்துக்குடி மாநகராட்சி நடவடிக்கை!

புதன் 25, ஜனவரி 2023 7:53:34 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சாலைகளில் சுற்றித்திரிந்த 71 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநகரில் மக்கள் குடியிருப்பு பகுதிகள் மட்டுமின்றி பஸ் நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட பொது இடங்கள், தெருக்களிலும் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. நோய்களால் பாதிக்கப்பட்ட நாய்களும் அதிகமாக நடமாடுகின்றன. இந்த நாய்கள் அவ்வப்போது மக்களை கடித்து விடுவதால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்துள்ளன. இதனை தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் தி.சாருஸ்ரீ ஆகியோர் உத்தரவின்பேரில் நகர்நல அலுவலர் (பொறுப்பு) ஸ்டாலின் பாக்கியநாதன் மேற்பார்வையில் மாநகராட்சி பணியாளர்கள் தெருநாய்களை பிடிக்கும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அதன்படி கடந்த 3 நாட்களாக தூத்துக்குடி பெருமாள்புரம், வி.வி.டி சந்திப்பு, பசும்பொன் நகர், அண்ணாநகர், மடத்தூர், பக்கிள் ஓடையை ஒட்டிய பகுதி, புதிய பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்த 71 தெரு நாய்களை மாநகராட்சி பணியாளர்கள் பிடித்தனர். இந்த நாய்களுக்கு தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் மூலம் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

மேலும், அனைத்து தெருநாய்களுக்கும் வெறிநோய் தடுப்பூசி போடப்படுகிறது. நோயால் பாதிக்கப்பட்ட நாய்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படும். கருத்தடை அறுவை சிகிச்சைக்கு பிறகு மூன்று நாட்கள் பராமரிக்கப்படும் நாய்கள் மீண்டும் அதே பகுதியில் கொண்டு விடப்படும். இதேபோல் மாநகராட்சி பகுதி முழுவதும் மக்களுக்கு தொல்லையாக சுற்றித் திரியும் நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory