» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி மறியல் போராட்டம் : 917 பேர் கைது

புதன் 25, ஜனவரி 2023 7:39:24 AM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்ட ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தினர் 917 பேர் கைது செய்யப்பட்டனர்.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலநிதி வழங்க வேண்டும், உப்பு தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் ஏற்படுத்த வேண்டும், பொதுத்துறையை தனியாருக்கு வழங்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி  மாநகர ஏ.ஐ.டி.யு.சி சார்பில் தூத்துக்குடி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்தது. 

போராட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. பொதுத் தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் தனலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கரும்பன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். போராட்டத்தால் டபிள்யூ.ஜி.சி ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சாலைமறியலில் ஈடுபட்ட 88 பெண்கள் உள்பட 120 பேரை கைது செய்தனர்.

நாசரேத்தில் 

நாசரேத்தில் ஏஐடியுசி சார்பாக  மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட ஏஐடியுசி தலைவர் கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் மாணிக்கம் முன்னிலை வகித்தார்.மறி யல் போராட்டத்தில் 35 பெண்கள் உள்பட 68 பேர் கள் கலந்து கொண்டனர்.

விளாத்திகுளம்

இதேபோல் விளாத்திகுளம் பஸ்நிலையம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. தாலுகா செயலாளர் பிச்சையா தலைமை தாங்கினார். மறியலில் ஈடுபட்ட 29 பெண்கள் உட்பட 81 ஏ.ஐ.டி.யு.சி.யினரை விளாத்திகுளம் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். 

இதேபோன்று எட்டயபுரம்,  புதியம்புத்தூர், திருச்செந்தூர், கோவில்பட்டி, கயத்தாறு,  உட்பட தூத்துக்குடி மாவட்டத்தில் 8 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 503 பெண்கள் உள்பட 917 பேரை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital












Thoothukudi Business Directory