» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஜியோ 5ஜி சேவை அறிமுகம்!

செவ்வாய் 24, ஜனவரி 2023 9:31:07 PM (IST)



தமிழகத்தில் தூத்துக்குடி, ஈரோடு மற்றும் தருமபுரி உள்ளிட்ட நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 50 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கியது..

இது தொடர்பாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: 5ஜி சேவைகள் அறிமுகமாகியுள்ள நகரங்களில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள், வெல்கம் ஆஃபருக்கு அழைக்கப்பட்டு, அன்லிமிடெட் டேட்டாவை 1 ஜிபிபிஎஸ் பிளஸ் வேகத்தில் அனுபவிக்க கூடுதல் கட்டணமின்றி இன்று முதல் வழங்கப்படுகிறது.

இந்த புத்தாண்டில் அனைத்து ஜியோ பயனரும், ட்ரூ 5ஜி தொழில்நுட்பத்தின் சேவைகளை அனுபவிக்கும் வகையில், 5ஜி சேவைகள் வழங்குவதை விரைவு படுத்தியுள்ளதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஆண்டு இறுதியான டிசம்பர் மாதத்திற்குள், இந்தியா முழுவதும் 5ஜி சேவைகள் விரிவுபடுத்தப்படும். ஜியோவின் சேவைகளை விரிவுபடுத்த உறுதுணையாக இருந்த ஆந்திரப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், கோவா, ஹரியாணா, ஜார்க்கண்ட், கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு நன்றி என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads











Thoothukudi Business Directory