» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வெளியூர் மீன்பிடி படகுகளை அனுமதிக்க கூடாது: எஸ்பியிடம் மீனவர்கள் மனு

செவ்வாய் 24, ஜனவரி 2023 8:15:39 AM (IST)

தருவைகுளத்தில் வெளியூர் மீன்பிடி படகுகளை அனுமதிக்க கூடாது என்று நாட்டுப்படகு மீனவர் சங்கத்தினர் எஸ்பியிடம் மனு அளித்தனர்..

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் புனித நீக்குலாசியார் நாட்டுப்படகு மீனவர் நலச்சங்க செயலாளர் தொம்மை ராஜ், தருவைகுளம் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் லூர்துராஜ் ஆகியோர் தலைமையில் மீனவர்கள் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணனிடம் அளித்த மனுவில், "தருவைகுளத்தில் 250 விசைப்படகுகளும், 150 சிறிய நாட்டுப்படகுகளும் உள்ளன. எங்கள் ஊரில் 200 மீட்டரில் சிறிய மீன்பிடி இறங்கு தளம் உள்ளது. இதனை நாங்கள் பயன்படுத்தி வருகிறோம்.

இந்த நிலையில் வெளியூர் படகுகள் தருவைகுளத்தில் மீன்களை இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்கலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்து உள்ளனர். இது எங்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையால் வெளியூர் படகுகள் தருவைகுளத்துக்கு வந்தால் மிகப்பெரிய போராட்டம் நடக்கும். ஆகையால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்களை கண்டித்து, பிரச்சினை இல்லாமல் எங்களை தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும்' என்று கூறி உள்ளனர்.


மக்கள் கருத்து

பழையJan 24, 2023 - 12:25:08 PM | Posted IP 162.1*****

காரணம் மீன்கள் குறைந்து விட்டது, காசுக்காக சுத்தமான மீன்களை வெளிநாட்டில் ஏற்றுமதி பண்ணுவதும், காசுக்காக பொதுமக்களுக்கு மீன்களை தங்கம் விலைக்கு விற்பதும், கடல் வளங்களை சுரண்டி ஆட்டைய போடுவது தான் இன்றைய சில மீனவர்களின் வேலையாகி போச்சு.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory