» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் போலி ஹெராயின் பறிமுதல் - வாலிபர் கைது !

திங்கள் 23, ஜனவரி 2023 3:57:22 PM (IST)

தூத்துக்குடியில்  போலி ஹெராயின் வைத்திருந்த இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், டவுன் டிஎஸ்பி சத்யராஜ் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் இன்று ரோந்து சென்றபோது, எஸ்எஸ் பிள்ளை தெரு, மார்க்கெட் அருகே சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து சோதனையிட்டதில், அவரிடம் ஹெராயின் போதைப் பொருள் வைத்திருப்பது தெரியிவந்தது. இதையடுத்து போலீசார் அந்த இளைஞரை கைது செய்து, அவரிடம் இருந்த 10 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தனர். 

விசாரணையில், அவர் தூத்துக்குடி பூபாலராயர்புரத்தை சேர்ந்த ரீகன் (42) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து தலா ஒரு கிலோ எடை கொண்ட 10 பாக்கெட்டுக்களை பறிமுதல் செய்து பரிசோதித்தனர். அந்த பொருள் யூரியா உரம் போன்று இருந்தது. இதனை தொடர்ந்து அந்த பொருளை பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளனர். 

தொடர்ந்து நடத்திய விசாரணையில் ரீகன், யூரியா உரம் போன்ற பொருளை, போலியாக ஹெராயின் போதை பொருள் என்றும், ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய் என்றும் கூறி சிலரிடம் விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட ரீகனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

1234Jan 23, 2023 - 04:32:07 PM | Posted IP 162.1*****

óó

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital






Thoothukudi Business Directory