» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து மணிமண்டபம் அடிக்கல் நாட்டு விழா: எம்.பி., அமைச்சர்கள் பங்கேற்பு
சனி 21, ஜனவரி 2023 4:14:51 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.77.87 லட்சம் மதிப்பீட்டில் குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி தமிழ் சாலை எம்.ஜி.ஆர். பூங்காவில் ரூ.77 இலட்சம் மதிப்பில் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் மணிமண்டபம் அமைக்கும் பணிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தலைமையில் மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இன்று அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
விழாவில் அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகரத்தந்தை என போற்றப்படும் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களுக்கு ரூ.77லட்சத்து 87ஆயிரத்து 343 மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்படுகிறது. தூத்துக்குடி தமிழ் சாலையில் உள்ள மாநகராட்சி எம்.ஜி.ஆர். பூங்காவிற்கு கீழ்ப்புறம் 376.60 சதுர அடி பரப்பில் முழு திருவுருவச் சிலையுடன் கூடிய மண்டபமும், மண்டபத்தை சுற்றியுள்ள பகுதியில் பேவர் பிளாக், புல்வெளி மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கப்படவுள்ளது என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாநகராட்சி ஆணையர் தி.சாருஸ்ரீ, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன்;, மாவட்ட ஊராட்சித் தலைவர் அ.பிரம்மசக்தி, மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ்;, ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் நலச்சங்கத்தினர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!
புதன் 27, செப்டம்பர் 2023 12:49:18 PM (IST)

சாலையில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகை பவளப்பாம்பு: வனத்துறையிடம் ஒப்படைப்பு!
புதன் 27, செப்டம்பர் 2023 12:03:10 PM (IST)

திருச்செந்தூரில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு: போராட்டம் நடத்த ஊர் மக்கள் முடிவு
புதன் 27, செப்டம்பர் 2023 11:16:00 AM (IST)

தூத்துக்குடி அருகே பைக் மீது கார் மோதல்: வாலிபர் பலி!
புதன் 27, செப்டம்பர் 2023 10:54:11 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை : கோட்டாட்சியர் விசாரணை!
புதன் 27, செப்டம்பர் 2023 10:47:50 AM (IST)

பைக் விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பலி!
புதன் 27, செப்டம்பர் 2023 10:40:33 AM (IST)

VINOTHJan 22, 2023 - 08:37:34 AM | Posted IP 162.1*****