» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ரூ.24,000 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

புதன் 7, டிசம்பர் 2022 5:17:06 PM (IST)

சேவை குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ரூ.24,000 வழங்க வேண்டுமென குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. 

கன்னியாகுமரி மாவட்டம் ஒழுகினசேரியைச் சார்ந்த ஜெயா மாரீஸ் ராஜ் என்பவர் கன்னியாகுமரியிலுள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலுள்ள இயந்திரத்தின் மூலம் ரூ.4,000 ஐ வடசேரி பகுதியிலுள்ள மற்றொரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் உள்ள தனது மனைவியின் சேமிப்பு கணக்கிற்கு அவரது அவசரத் தேவைக்காக அனுப்பியுள்ளார். ஆனால் பணம் சென்று சேரவில்லை. உடனடியாக கன்னியாகுமரியில் உள்ள வங்கியில் எழுத்து மூலமாக புகார் அனுப்பியுள்ளார். ஆனால் செலுத்திய பணம் திரும்ப கிடைக்கவில்லை.

இதைக் கண்ட புகார்தாரர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்து உடனடியாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் ஆ.சங்கர் ஆகியோர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ஏற்கனவே செலுத்தப்பட்ட ரூ.4,000, நஷ்ட ஈடு ரூ.15,000 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5,000 ஆக மொத்தம் ரூ.24,000ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital



Thoothukudi Business Directory