» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டேக்வாண்டோ, ஜூடோ போட்டிகளில் ஸ்ரீகாமாக்ஷி வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை!

புதன் 7, டிசம்பர் 2022 4:55:30 PM (IST)தூத்துக்குடி வருவாய் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ மற்றும் ஜூடோ போட்டிகளில் தூத்துக்குடி ஸ்ரீகாமாக்ஷி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். 

டேக்வாண்டோ போட்டியில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான 38கிலோ எடைப் பிரிவில்  துர்கா ஸ்ரீதேவி தங்கப் பதக்கமும், 29கிலோ எடைபிரிவில் ஷிவானி தங்கப் பதக்கமும், 26கிலோ எடை பிரிவில் மகிஷா பிரியங்கா தங்கப் பதக்கமும், 17வயது மாணவிகளுக்கான 55கிலோ  எடை பிரிவில் ஷாரணி தங்கப் பதக்கமும், 19வயது மாணவர்களுக்கான 63 கிலோ உட்பட்ட எடை பிரிவில் அஸ்வின் தங்கப் பதக்கமும், 17வயது  மாணவர்களுக்கான 51கிலோ எடை பிரிவில் நரேஷ் தங்கப் பதக்கமும், 48கிலோ எடை பிரிவில் பாலமுருகன் தங்கப் பதக்கமும், 38கிலோ எடை பிரிவில் நிவாஷ் சுஜித் தங்கப்பதக்கமும் வென்றனர்.

ஜூடோ போட்டியில் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான 55 கிலோ எடை பிரிவில் கேதீஸ்வரன் தங்கப் பதக்கமும், 17வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான 55கிலோ எடை பிரிவில் சதீஷ் தங்கப் பதக்கமும் வென்று மாநில அளவிலான டேக்வாண்டோ மற்றும் ஜூடோ போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார்கள். வெற்றிபெற்ற மாணவ, மாணவிகள், டேக்வாண்டோ மற்றும் ஜூடோ பயிற்சியாளர் ராமலிங்க பாரதி ஆகியோரை பள்ளியின் தாளாளர் அருணாச்சலம், பள்ளி முதல்வர் மீனா குமாரி, துணை முதல்வர் சுப்புலட்சுமி, உடற்கல்வி ஆசிரியர் முத்துக்குமார் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory