» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புதுக்கோட்டை பள்ளியில் கிறிஸ்துமஸ் ஈகை விழா

புதன் 7, டிசம்பர் 2022 3:54:57 PM (IST)புதுக்கோட்டை, பி.எஸ்.பெரியநாயகம் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் ஈகை விழா நடைபெற்றது.
           
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை பி.எஸ். பெரியநாயகம் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் ஈகை விழா நடைபெற்றது. விழாவிற்கு தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தின் லே செயலரும், பள்ளியின் தாளாளருமாகிய நீகர் பிரின்ஸ் கிப்சன் தலைமை தாங்கினார். புதுக்கோட்டை சேகரகுரு தாமஸ் ரவிக்குமார் ஆரம்ப ஜெபம் செய்தார். திருமண்டல குருத்துவ செயலர் டாக்டர் இம்மானுவேல் வான்ஸ்றக்  தேவசெய்தி அளித்தார்.
 
விழாவில் மாணவ, மாணவிகளின் கிறிஸ்துமஸ் பாடல்கள், கிறிஸ்து நாடகம், சாண்டா குலோஸ் வருகை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருமண்டல உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங், திருமண்டல பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு புத்தாடை வழங்கினர். திருமண்டல உப தலைவர் தமிழ்செல்வன்  நிறைவு ஜெபம் செய்து ஆசி வழங்கினார். விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியை தவமணி தேவி தலைமையில் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory