» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் 22 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் : அதிமுக அறிவிப்பு
புதன் 7, டிசம்பர் 2022 3:33:02 PM (IST)
திமுக அரசைக் கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் வருகிற 9ம் தேதி 22 இடங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் வெளியிட்ட அறிக்கை. சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டண உயர்வு, பால் விலை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்றவற்றால் தமிழக மக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ள விடியா திமுக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட கழக இடைக்கால பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.
அதன்படி வருகிற 09-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் பேரூராட்சிக் கழகங்களின் சார்பில் ஸ்ரீவைகுண்டம், பெருங்குளம், சாயர்புரம், ஏரல், ஆழ்வார்திருநகரி தென்திருப்பேரை, நாசரேத், ஆத்தூர், ஆறுமுகநேரி, கானம், உடன்குடி, சாத்தான்குளம், உள்ளிட்ட 12 இடங்களிலும், 13-தேதி செவ்வாய்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் மாநகர பகுதி மற்றும் நகரக் கழகங்களின் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி, காயல்பட்டிணம் மற்றும் திருச்செந்தூர் நகராட்சி ஆகிய 3 இடங்களிலும், 14-ம் தேதி புதன் கிழமை அன்று ஒன்றிய கழகங்களின் சார்பில் ஸ்ரீவைகுண்டம் கிழக்கு,
ஸ்ரீவைகுண்டம் மேற்கு, உடன்குடி, ஆழ்வார்திருநகரி கிழக்கு, ஆழ்வார்திருநகரி மேற்கு, சாத்தான்குளம், திருச்செந்தூர் ஆகிய 7 இடங்களிலும் என 22 இடங்களில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மேற்கண்ட கண்டண ஆர்ப்பாட்டங்களில் இதில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டத்திற்குட்பட்ட முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, மாநகரபகுதி, நகர, பேரூராட்சி, மாநகர வட்ட, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் கழக சார்பு அணிகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், கழக தொண்டர்கள், மகளிர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு கண்டணம் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குளத்தூா் டிஎம்எம் கல்லூரியில் கலை விழா போட்டி : தூத்துக்குடி ஏ.பி.சி., மகளிா் கல்லூரி வெற்றி
சனி 4, பிப்ரவரி 2023 5:35:36 PM (IST)

இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகளுக்காக ரயில் போக்குவரத்தில் மாற்றம்
சனி 4, பிப்ரவரி 2023 4:48:10 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் : தென் மண்டல ஐஜி உத்தரவு
சனி 4, பிப்ரவரி 2023 4:30:51 PM (IST)

பிட்காயின் முதலீடு என்ற பெயரில் ரூ.12லட்சம் மோசடி : வாலிபர் கைது!
சனி 4, பிப்ரவரி 2023 4:09:01 PM (IST)

தூத்துக்குடியில் விஷம் கலந்த அரிசியை தின்ற 3 ஆடுகள் சாவு: போலீசார் விசாரணை
சனி 4, பிப்ரவரி 2023 3:19:27 PM (IST)

நாசரேத்தில் திமுக சார்பில் அண்ணா நினைவு அஞ்சலி
சனி 4, பிப்ரவரி 2023 11:58:08 AM (IST)
