» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 10ம் தேதி இலவச மருத்துவ முகாம் : கனிமொழி எம்பி துவங்கி வைக்கிறார்

புதன் 7, டிசம்பர் 2022 12:49:26 PM (IST)

தூத்துக்குடியில் வரும் 10ம் தேதி (சனிக்கிழமை) பல்துறை இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. 

தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சென்னை வடபழனி போர்டிஸ் மருத்துவமனை நடத்தும் பல்துறை இலவச சிறப்பு மருத்துவ முகாம் வரும் 10ம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது. சிறப்பு மருத்துவ முகாமில்  போர்டிஸ் மருத்துவமனை இயக்குநர் வெங்கட பணிதர் நெல்லூரி வரவேற்புரையாற்றுகிறார். சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், ஆட்சியர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

மருத்துவ முகாமை பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமை வகித்து துவக்கி வைக்கிறார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவக்குமார், சுகாதார துறை துணை  இயக்குநர்கள் பொற்செல்வன், பாஸ்கோ ராஜா உள்ளிட்ட பல்வேறு துறையைச் சார்ந்த மருத்துவர்கள் தொழிற்நுட்பத்துடன் பங்கு பெறுகின்றனர்.

சிறப்பு மருத்துவர்களாக இருதய நோய், கல்லீரல் நோய், சிறுநீரக நோய், இருதய அறுவைசிகிச்சை, எலும்பியல் நோய், வலி மருத்துவம், பெண்கள் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை, இ.சி.ஜி, எக்கோ, வயிற்று ஸ்கேன், போன் டென்சிட்டி, பிப்ரோ ஸ்கேன் உள்ளிட்டவைகளும் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பரிசோதனைகள் இலவசமாக பார்க்கப்படும்.

ஏற்கனவே மருத்துவம் பார்த்து வரும் நோயாளிகள் பழைய ரிப்போர்ட்டுகளை கொண்டு வர வேண்டும். இருதய செயல் இழப்பு கொண்ட நோயாளிகள் இருதய மாற்று அறுவைசிகிச்சைக்கு சிறப்பு ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். இருதய பை-பாஸ், இருதய வால்வு மாற்றுதல், இருதய மாற்று அறுவை சிகிச்சை, இருதய ஸ்டென்ட் வைத்தல் போன்றவை தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் மூலம் செய்து கொள்ளலாம். முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு முகாம் ஒருங்கிணைப்பாளர் அய்யனார் பெருமாள் (9688086641) என்பவரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory