» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் தகவல்
புதன் 7, டிசம்பர் 2022 12:45:40 PM (IST)
சமூக, வகுப்பு நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு ஆகிய பணிகளுக்காக வழங்கப்பட்டு வரும் கபீர் புரஸ்கார் விருது பெற தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்கள் (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளர்கள் ஆகியோர்கள் நீங்கலாக) சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியாளர்கள் சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் இப்பதக்கத்தைப் பெறத் தகுதியுடையவராவர்.
மேலும் இவ்விருதானது ஒரு சாதி, இனம், வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற சாதி, இன வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.
மேற்காணும் விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு ஆணைய இணையதள முகவரியான www.sdat.tn.gov.in மற்றும் http://awards.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டிய கடைசி நாள் : 14.12.2022. மேலும் விபரங்களுக்கு கீழ்க்காணும் முகவரியில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்,
மாவட்ட விளையாட்டரங்கம்,
தூத்துக்குடி - 628001
போன் : 0461 2321149
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குளத்தூா் டிஎம்எம் கல்லூரியில் கலை விழா போட்டி : தூத்துக்குடி ஏ.பி.சி., மகளிா் கல்லூரி வெற்றி
சனி 4, பிப்ரவரி 2023 5:35:36 PM (IST)

இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகளுக்காக ரயில் போக்குவரத்தில் மாற்றம்
சனி 4, பிப்ரவரி 2023 4:48:10 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் : தென் மண்டல ஐஜி உத்தரவு
சனி 4, பிப்ரவரி 2023 4:30:51 PM (IST)

பிட்காயின் முதலீடு என்ற பெயரில் ரூ.12லட்சம் மோசடி : வாலிபர் கைது!
சனி 4, பிப்ரவரி 2023 4:09:01 PM (IST)

தூத்துக்குடியில் விஷம் கலந்த அரிசியை தின்ற 3 ஆடுகள் சாவு: போலீசார் விசாரணை
சனி 4, பிப்ரவரி 2023 3:19:27 PM (IST)

நாசரேத்தில் திமுக சார்பில் அண்ணா நினைவு அஞ்சலி
சனி 4, பிப்ரவரி 2023 11:58:08 AM (IST)
