» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு: நாசரேத், வேப்பலோடை பள்ளி மாணவிகள் சாதனை!

புதன் 7, டிசம்பர் 2022 11:22:50 AM (IST)

தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வில், நாசரேத் மாணவி மாநில அளவில் 4ஆம் இடமும் வேப்பலோடை மாணவி 6வது இடமும் பிடித்துள்ளனர். 

பள்ளி மாணவர்களின் தமிழ் மொழித் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் மாநிலம் முழுவதும் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு கடந்த அக்டோபர் மாதம் 15ம் நடைபெற்றது. இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை மூலமாக மாதம் ரூ.1,500/- வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். 

தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் (CBSE/ICSE உட்பட) 11ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், ஊக்கத் தொகைக்கான பட்டியலை அரசு தேர்வுகள் இயக்ககம் கடந்த 2ஆம் தேதி வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பட்டியலில், போளூர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த சுவாதி என்ற மாணவி முதல் இடம் பிடித்துள்ளார். 

அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்கள் பட்டியலில், ஆயக்காரன்புலம், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த அபிநயா முதலிடம் பெற்றுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை மூலமாக மாதம் ரூ.1,500/- வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். 

நாசரேத் பள்ளி

இந்த தேர்வில் நாசரேத் சாலமோன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியின் 11ஆம் வகுப்பு  மாணவி மு.குபேரசத்தியா எழுதி மாநிலத்தில் 4-வது இடத்தையும் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார். வெற்றி பெற்ற மாணவியை பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார். இம் மாணவியயை பள்ளி முதல்வர் ஆசிரியர்கள், அலுவலர்கள், மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.

வேப்பலோடை பள்ளி

இத்தேர்வு எழுதிய வேப்பலோடை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி சந்தியா, மாணவன் சந்தோஷ் ஜெபராஜ் ஆகியோர் வெற்றி பெற்றுள்னர். இதில் சந்தியா மாநில அளவில் ஆறாம் இடம் பிடித்துள்ளார். 

வெற்றிக்கு உழைத்திட்ட முதுகலை தமிழாசிரியை தேவி சந்தனமாரி, மற்றும் மாணவர்களுக்கும் தலைமை ஆசிரியர் சேகர், உதவி தலைமை ஆசிரியர் ஜாய் ப்ரியா, ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் முனியசாமி, செயலர் ஜேம்ஸ் அமிர்தராஜ், உறுப்பினர்கள் முத்துக் கிருஷ்ணன், ராஜபாண்டி, புங்கராஜ், கருப்பசாமி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory