» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஹோட்டல் பிருந்தாவன் திறப்பு விழா : டைரக்டர் ஹரி பங்கேற்பு!

செவ்வாய் 6, டிசம்பர் 2022 5:40:21 PM (IST)



தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட ஹோட்டல் பிருந்தாவன் திறப்பு விழா நடைபெற்றது. சினிமா டைரக்டர் ஹரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சென்னை, தூத்துக்குடி,  ஆத்தூர், பாளையங்கோட்டை மக்களின் பேராதரவைப் பெற்ற ஹோட்டல் பிருந்தாவன் தூத்துக்குடியில் விரிவாக்கத்துடன் பழைய பேருந்து நிலையம் எதிரில் பாலவிநாயகர் கோவில் தெருவில் பிகே டவர்சில் தொடங்கியுள்ளது. திறப்பு விழாவில் திரைப்பட இயக்குநர் ஹரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஹோட்டல் ஆத்தூர் மணி குரூப்ஸ் நிறுவனங்களின் தலைவர் ம.தமிழ்செல்வன் திறந்து வைத்தார். 

திருமதி மாரியம்மாள் மணி குத்து விளக்கேற்றினார். பொதுமேலாளர் மாணிக்கசெல்வம் அனைவரையும் வரவேற்றார். விழாவில் வணிகர் சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி, ஹோட்டல் சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் செந்தில் ஆறுமுகம், செயலாளர் சுப்பு, பொருளாளர் பாலமுருகன், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி உதவி பொதுமேலாளர் பாலாஜி, வங்கி தெற்கு கிளை மேலாளர் கண்ணன், பிகே டவர்ஸ் உரிமையாளர்கள் அழகு, துரை, அன்பு உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory