» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூய்மை பணியாளர்களுக்கும் இடையூறு ஏற்படுத்த வேண்டாம்: மேயர் வேண்டுகோள்!

ஞாயிறு 4, டிசம்பர் 2022 10:11:27 AM (IST)



தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கழிவுநீா்க் கால்வாய், மழைநீா் வடிகால் பணிகளை மேயா் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தாா்.

தூத்துக்குடி குறிஞ்சி நகா் பகுதியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணியை மேயா் ஜெகன் பெரியசாமி நேற்று ஆய்வு செய்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறும்போது, பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள குப்பைகள், கழிவுகளை கால்வாய்களில் கொட்டுவது தொடா்கிறது. இதனால், மாநகராட்சிக்கும், தூய்மைப் பணியாளா்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. இத்தகைய செயலை பொதுமக்கள் கைவிட வேண்டும். தூய்மையான மாநகராட்சியை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory