» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கி.ராஜநாராயணன் நினைவரங்கம் நாளை திறப்பு விழா : ஆட்சியர் ஆய்வு

வியாழன் 1, டிசம்பர் 2022 4:14:02 PM (IST)



கோவில்பட்டியில் ‘கரிசல் இலக்கியத்தின் தந்தை” எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நினைவரங்கத்தினை முதலமைச்சர் ஸ்டாலின்  நாளை திறந்து வைக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கரிசல் இலக்கியத்தின் தந்தை மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களுக்கு ரூ.150 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நினைவரங்கத்தினை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், இன்று (01.12.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: 

தமிழ்நாடு முதலமைச்சர், கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராஜநாராயணன் அவர்களுக்கு கோவில்பட்டியில் நினைவரங்கம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்கள். அதனடிப்படையில் கோவில்பட்டியில் ரூ.150 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள நினைவரங்கம் அழகிய புல்வெளிகளுடன் டிஜிட்டல் நூலகம், நிர்வாக அறை, நூலகம், கற்சிலை, கண்காட்சி மற்றும் முழுவுருவ வெண்கலச்சிலையுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 

நினைவரங்கம் மற்றும் முழுவுருவச்சிலை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நாளை (02.12.2022) காலை திறக்கப்படவுள்ளதால் இன்று ஆய்வு செய்யப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நினைவரங்கம் திறந்து வைக்கப்பட்டவுடன் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்அவர்களின் முயற்சியால் மணிமண்டபத்தில், கி.ராஜநாராயணன் பயன்படுத்திய பொருட்கள் அவரது குடும்பத்தினரிடம் இருந்து பெறப்பட்டு பாண்டிச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்டு வைக்கப்படும். 

நினைவரங்கத்தில் உள்ள நூலகத்தில் அவர் எழுதிய புத்தகங்கள் அனைத்தும் வைக்கப்படும். அதுமட்டுமல்லாமல் கு.அழகிரிசாமி, சோ.தர்மன் உள்ளிட்ட கரிசல் இலக்கியவாதிகளின் புத்தகங்களும் படிப்பதற்காக வைக்கப்படும். மேலும் டிஜிட்டல் அரங்கில் கி.ரா. அவர்களின் புத்தகங்கள் அனைத்தும் படிப்பதற்கும், காட்சிக்கும் வைக்கப்படும். கோவில்பட்டியில் 17க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். சாகித்ய அகாடமி விருது பெற்ற 5 எழுத்தாளர்கள் உள்ளனர். எனவே கோவில்பட்டியிலும் புத்தக திருவிழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்தார்.

ஆய்வில் கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலெட்சுமி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் கட்டடம் மற்றும் பராமரிப்பு தம்புரான் தோழன், உதவி செயற்பொறியாளர் பரமசிவம், கோவில்பட்டி வட்டாட்சியர் சுசீலா, நகர்மன்ற தலைவர் கருணாநிதி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory