» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காரில் கடத்தி வந்த ரூ.2.26 லட்சம் குட்கா பறிமுதல்! 4 பேர் கைது - கார், பைக் பறிமுதல்!!

வியாழன் 1, டிசம்பர் 2022 10:14:27 AM (IST)



குரும்பூர் அருகே காரில் கடத்தி வந்த ரூ.2.26 லட்சம் மதிப்புள்ள மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் பகுதியில் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் மேற்பார்வையில் குரும்பூர் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சிறப்பு உதவி எஸ்ஐ குணசேகரன் தலைமையிலான தனிப்படையினர் நாலுமாவடி வாய்க்கால் பாலத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த 2 கார்கள் மற்றும் 2 பைக்குகளை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். 

அப்போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட ஆறுமுகநேரி மேலநவலடிவிளை பகுதியை சேர்ந்த ஹரிராமன் மகன் பாலகிருஷ்ணன்(42), சாத்தான்குளம் மாணிக்கவாசகபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சேர்மதுரை(33), ஆறுமுகநேரி பூவரசூர் பகுதியை சேர்ந்த காசி மகன் சத்தியராஜ்(35), நாசரேத் நல்லான்விளை பகுதியை சேர்ந்த செல்லையா மகன் குமார்(48) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். 

தொடர்ந்து காரில் கடத்தி வந்த ரூ.2.26 லட்சம் மதிப்புள்ள 446 கிலோ புகையிலை பொருட்கள், 2 கார்கள், 2 பைக்குகள், 4 செல்போன்கள் மற்றும் ரூ.13 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடத்தலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஒருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory